- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யாவுடன் நான் எடுத்திருக்கும் திரைப்படம் கேங்ஸ்டர் படம் இல்லை... குண்டை தூக்கி போட்ட கார்த்திக் சுப்பராஜ்......

சூர்யாவுடன் நான் எடுத்திருக்கும் திரைப்படம் கேங்ஸ்டர் படம் இல்லை… குண்டை தூக்கி போட்ட கார்த்திக் சுப்பராஜ்… சரியா போச்சு போங்க…

- Advertisement -

சூர்யா தற்போது தனது 44வது திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூட்டோடு சூட்டாக இந்தத் திரைப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். அந்தமானில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது.

 

- Advertisement -

இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். கருணாகரன், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் நடைபெறும் போது அறிமுக வீடியோ அனைத்தையும் கவர்ந்தது.

 

- Advertisement -

அதில் தூரத்தில் இருந்து, சூர்யா நடந்து வருவது போலவும், தனது கூட்டத்தினருடன் இணைந்து துப்பாக்கியை இருப்பது போலவும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன. மேலும் பங்க் மற்றும் குறுந்தாடி வைத்து வித்தியாசமான லுக்கில் காட்சியளித்தார் சூர்யா. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

 

அப்போதே இது கேங்ஸ்டர் திரைப்படம் தான் என்று பலரும் கூறி வந்தார்கள். ஆனால் இதற்கு படக்குழு தரப்பிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. தொடர்ந்து சூட்டிங் நடைபெற்று வந்த சூழலில், தற்போது அது முடிந்திருக்கிறது. வெறும் நான்கே மாதங்களில் சூட்டிங் முடிந்து இருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சூர்யா.

 

இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சூர்யா திரைப்படம் குறித்த பல்வேறு தகவல்களை கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்து இருக்கிறார். அதில் தொகுப்பாளர் படம் கேங்ஸ்டர் ஸ்டோரியா என்று கேட்டபோது அதற்கு இயக்குனர் பதில் அளித்தார். பலரும் இதனை கேங்ஸ்டர் கதை தான் என்று கூறுகிறார்கள்.

 

ஆனால் இது லவ் ஸ்டோரி திரைப்படம். நான் எடுத்தாலே அது கேங்ஸ்டர் படம் தான் என்று முடிவெடுத்து விட்டார்கள் போல. ஆனால் பல நாட்களாக எனக்கு ஒரு லவ் கதையை எடுக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தது. அதைத்தான் இந்த படத்தில் செய்திருக்கிறேன். காதலோடு சேர்த்து ஆக்சன் காட்சிகளும் இதில் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

 

- Advertisement -

சற்று முன்