- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை அப்படிப்பட்ட நடிகை என்று ஆரம்பத்தில் பேசினார்கள், இன்னும் அந்த வேதனை எனக்கு மறக்கலே… ...

என்னை அப்படிப்பட்ட நடிகை என்று ஆரம்பத்தில் பேசினார்கள், இன்னும் அந்த வேதனை எனக்கு மறக்கலே… வருத்தப்பட்டு பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகைகளில் ஒருவர்தான் கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய் சூர்யா சியான் விக்ரம் தனுஷ் ரஜினிகாந்த் ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு என இப்போதும் பிஸியாக நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் நடித்த அண்ணாத்த பைரவா சர்கார் தொடரி சாமி 2 ரெமோ ரஜினி முருகன் நடிகையர் திலகம் ரகு தாத்தா சைரன் 108 உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களாக இருக்கின்றன. இதில் சில படங்கள் பெரிய வெற்றி படங்களாகவும், சில படங்கள் தோல்வி படங்களாக இருந்தாலும் ஒரு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பு இந்த படங்களில் மிகச் சிறப்பாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.

- Advertisement -

மறைந்த நடிகை சாவித்திரி தேவி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மிக இளம் வயதில் சாவித்திரி போன்ற ஒரு சீனியர் நடிகையின் வாழ்க்கை வரலாறை கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரமாக ஏற்று நடித்தது மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. இந்த படத்தில் நடித்ததற்காக மத்திய அரசின் சிறந்த நடிகை தேசிய விருது பெற்றார் கீர்த்தி சுரேஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக கீர்த்தி சுரேஷ் கதாநாயகியை மையப்படுத்திய கதையம்சம் கொண்ட படங்களில், தொடர்ந்து நடித்து வருகிறார். இது என்ன மாயம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் கீர்த்தி சுரேஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். அண்ணாத்த படத்தில் நடித்த நேரத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை கூட கீர்த்தி சுரேஷ் மறுத்துவிட்டார்.

- Advertisement -

இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், ஒரு மலையாள படத்தில் நடிக்க தான் எனக்கு முதலில் வாய்ப்பு வந்தது. நானும் அம்மா மாதிரி நடிகையாக போகிறேன் என்ற மகிழ்ச்சியோடு சென்றேன். ஆனால் அந்த படம் நின்று விட்டது. அதன்பிறகு 2 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டேன். அந்த படங்களும் இடையிலே நின்று விட்டன.

அதனால் என்னை ராசியில்லாத நடிகை என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் நான் முயற்சியை கைவிடவில்லை. மெல்ல மெல்ல என்னை மெருகேற்றி தொடர்ந்து படங்களில் நடித்து தேசிய விருது பெற்றேன். இப்போது நிறைய நல்ல படங்களில் நடித்து பெயர் வாங்கி இருந்தாலும், ஆரம்ப காலத்தில் எதிர்கொண்ட அந்த விமர்சனங்கள் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வந்து வேதனைப்படுத்துகின்றன என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்