எந்திரன் திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியையே சந்தித்தன. சில படங்கள் திரையரங்கில் வெளியாகி இரண்டு மூன்று நாட்களிலேயே வெறிச்சோடியதால் இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் தானா என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பும் அவல நிலை உருவானது.
அந்த நேரத்தில் அவர் நடிப்பில் வெளியான 2.ஓ மற்றும் பேட்ட ஆகிய இரண்டு திரைப்படங்களுமே வசூல் ரீதியாக கொஞ்சம் பேசப்பட்டன. கபாலி, காலா திரைப்படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த, அதன் அளவை அந்த திரைப்படங்கள் பூர்த்தி செய்யவில்லை என்றுதான் கூற வேண்டும்.
அதிலும் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கிய அனிமேஷன் திரைப்படமான கோச்சடையான், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தர்பார், கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் எடுக்கப்பட்ட லிங்கா, சிறுத்தை சிவா படைப்பில் உருவான அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் வந்த இடம் தெரியாமல் மறைந்து போயின.
இப்படி தொடர் தோல்வியில் காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருந்தார். இதற்காக டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை எடுத்த தேசிங்கு பெரியசாமி உள்பட ஏராளமான இளம் இயக்குனர்களிடம் அவர் கதை கேட்டார்.
இறுதியில் நெல்சனின் கதையை அவர் டிக் செய்ய, கன்னட பிரபலம் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோரும் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம், எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் அளவுக்கு அந்த திரைப்படம் வசூலித்ததால், மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றால் ரஜினிகாந்த்.
இந்த நிலையில் அண்ணாத்த திரைப்படம் சமயத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை தொடர்புகொண்டு பேசியது தொடர்பான தகவல் இப்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னிடம் கிராமத்து மண் சார்ந்த கதையை எழுத சொல்லி கேட்டார். உடனடியாக அவருக்கென ஒரு கதையை தயாரித்து கூறினேன். ஆனால் அது சரியாக எடுபடவில்லை. இதனால் அவர் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்தார் என்று தெரிவித்திருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், அட பாவமே கார்த்திக் சுப்புராஜ் கதையை விட்டுட்டா இவர் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.





