இந்திய சினிமாவில் மிக உச்சபட்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் தொடங்கி சமீபத்தில் வெளியான வாரிசு வரைக்கும் விஜய் தொட்ட உயரங்கள் ஏராளம். ஆரம்பத்தில் தனது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்திலேயே நடித்து வந்த அவர், பிறகு மற்ற இயக்குனர்களிடம் சென்று சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுக்க ஆரம்பித்தார்.
பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட திரைப்படங்கள் ஆரம்ப காலத்தில் அச்சாரமாய் அமைந்ததால், அங்கிருந்து வெற்றி பாதையுடன் புறப்பட்ட விஜய் இன்று தமிழ் சினிமாவில் தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார். இப்போதெல்லாம் விஜய் படங்கள் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, ப்ரீ பிசினஸில் மிகுந்த லாபம் பார்த்து விடுகின்றன.
விஜய் தனது மகனான ஜேசன் சஞ்சய்யை ஆரம்பத்திலேயே சினிமாவில் அறிமுகப்படுத்தினார். வேட்டைக்காரன் படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்ட பாடலில் ஒரு சிறிய பகுதியில் மட்டும் தனது தந்தையுடன் சஞ்சய் ஆடி இருப்பார். இதனால் வருங்காலத்தில் நிச்சயம் விஜய்யின் மகன் சினிமாவில் நடிகராக வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
தளபதி விஜய்யும் இதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிகிறது. இது தொடர்பாக பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடம் பேசிய விஜய், தனது மகனுக்கென தனி கதையை உருவாக்க கூறினாராம். அதுவும், விஜய்க்கு பிடித்த போனதால் சஞ்சயிடம் இது குறித்து கேட்க, தனக்கு இயக்கத்தில் மட்டும் தான் ஆசை என்று அவர் தெரிவித்து விட்டாராம்.
திரைக்கதை எழுதும் தொடர்பாக கனடாவில் மேற்படிப்பு படித்த சஞ்சய், தனது நண்பர்களுடன் இணைந்து குறும்படத்தை எடுத்தார். இந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், சஞ்சய்யின் கதையை லைக்கா நிறுவனம் டிக் செய்தது. இது குறித்து தனது மகிழ்ச்சியையும் சஞ்சய் தெரிவித்து இருந்தார்.
தற்போது அவரது கவிக்கு யார் கதாநாயகன் என்பதுதான் முதல் கேள்வியாக உள்ளது. சஞ்சய்யும் விக்ரம் மகன் துருவ்வும் நண்பர்கள் என்பதால், அவரே கதாநாயகனாக நடிப்பார் என்று ஒரு தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது, கவின் ஜேசன் சஞ்சய்யின் நாயகனாக நடிப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட, கவின்தான் படத்திற்கு ஹீரோ என லைக்கா நிறுவனமும் சஞ்சய்யும் டிக் செய்து விட்டார்களாம். தற்போது ஸ்டார் படத்தில் நடித்து வரும் கவின், அடுத்ததாக விஜயின் மகன் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





