கடந்த சில தினங்களாக டாக் ஆஃப் தமிழ்நாடு அளவுக்கு மாறியிருக்கிறார் நடிகர் தனுஷ். நடிகர் விஜயை தொடர்ந்து நடிகர் தனுஷூம் அரசியலில் குதிக்க போவதாக தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் அவர் தனது பிறந்த நாளில் பேசிய விதமும் காட்டிய ஆடிட்யூட்டும் ஒரு அரசியல்வாதியாக அவரை வெளிப்படுத்தியிருக்கிறது.
அந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் பேசியதாவது, இவ்வளவு பேர் இங்கே ஒன்றாக கூடி இருக்கிறீர்கள். இந்த கூட்டத்துக்கு ஒற்றுமைக்கு ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்திக்கு ஒரு நோக்கமும் இருக்க வேண்டும். ஏதோ இசை வெளியீட்டு விழாக்களில் கூடினோம். ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டோம் என்று மட்டுமில்லாமல் இனி செயல்பட வேண்டும்.
இதோடு மட்டுமில்லாமல் உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த நலத்திட்டங்களை செய்யுங்கள். உங்களை நினைத்து என்னை இன்னும் பெருமைப்பட வையுங்கள் என்று நடிகர் தனுஷ் பேசியிருக்கிறார். மேலும் ஜெயிக்கற வரைக்கும் போராடணும். மோதி பார்த்திடணும். அஜீத் சொன்ன மாதிரி நீயாக ஒத்துக்கற வரைக்கும் தோல்வி கிடையாது என்றும் ஆவேசமாக தனுஷ் பேசியிருந்தார்.
இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது, முதல்வர் விஜயோட ஜோதிடரான ரத்தன் பண்டித்தை நடிகர் தனுஷ் தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார். என்னை எப்படியாவது சிஎம் ஆக்கிடுங்க. விஜய்க்கு என்னென்ன பண்ணுனீங்களோ அதையெல்லாம் நானும் பண்ண ரெடி என்று தனுஷ் அவர்கிட்ட கேட்டுக்கிட்டே இருக்காராம்.
ஆனால் ரத்தன் பண்டித் அவரை தவிர்க்க தனுஷூக்கு அப்பாயின்மென்ட் கொடுக்காமல் தள்ளி போட்டுக்கிட்டே இருக்காராம். இதுக்கு நடுவுல கொளத்தூரில் இருக்கிற ஒரு பிரபல ஜோதிடரை பார்த்து அவர் சொன்ன அட்வைஸ்படி சில விஷயங்களை இப்போது தனுஷ் பண்ணிட்டு இருக்காராம் என்று அந்தணன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
பிரபல ஜோதிடர் ரத்தன் பண்டித் கூறிய ஆலோசனைகளின்படி தான் கட்சி துவங்கியது முதல் விஜய் செயல்பட்டு வருகிறார். நெற்றியில் அவர் வைக்கும் கருப்பு பொட்டு கருப்பு கோட் அணிவது கையில் சிவப்பு கயிறு இப்போது நாமக்கல் மாளிகைக்கு சிஎம் அலுவலக அறை மாற்றம் என ஜோதிடரின் ஆலோசனைப்படி விஜய் செயல்படுவதாக கூறப்படும் நிலையில், நடிகர் தனுஷ் அந்த ஜோதிடரிடம் தொடர்ந்து பேசி வருவதை பத்திரிகையாளர் அந்தணன் உறுதி செய்திருக்கிறார்.





