- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல் படத்தின் டைட்டிலில் நடிகர் கவின் நடிக்கும் புதிய படம், துவக்கவிழா பூஜை நடந்தது எங்கு...

கமல் படத்தின் டைட்டிலில் நடிகர் கவின் நடிக்கும் புதிய படம், துவக்கவிழா பூஜை நடந்தது எங்கு தெரியுமா? ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கவின். விஜய் டிவியில் வேலைக்காரன் என்ற சீரியலில் நடித்த அவர் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார். அதன்பிறகு சில படங்கள் நடித்தார். அவருக்கு டாட்டா ஸ்டார் லிப்ட் மற்றும் பிளடி பெக்கர் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தன.

இப்போது நடிகர் கவின் தண்டட்டி படத்தின் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் கவின் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் அதிக சம்பளம் கேட்பதாக கூறப்பட்டாலும் அவரது படங்களை ஜென்ஸி ரசிகர்கள் விரும்புவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ராம் சங்கையா இயக்கும் புதிய படத்துக்கு பேர் சொல்லும் பிள்ளை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த பேர் சொல்லும் பிள்ளை என்ற படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நாயகியாக ராதிகா நடித்திருந்தார். மேலும் கேஆர் விஜயா ஜெய் கணேஷ் ரவீந்தர் ரம்யா கிருஷ்ணன் மனோரமா பீலிசிவம் கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பட்டாசு கம்பெனி முதலாளி கேஆர் விஜயாவை அவரது பிள்ளைகள் ஏமாற்றி விடுகின்றனர்.

- Advertisement -

ஆனால் கேஆர் விஜயாவின் வளர்ப்பு பிள்ளயைான கமல், அந்த வீட்டில் வேலைக்காரனாக இருந்து நல்ல பிள்ளையாக நடந்து அந்த குடும்பத்தையும் கேஆர் விஜயாவின் அன்பையும் பெறுகிறார். இந்த படம் கமலுக்கு பெரிய வெற்றிகளை பெற்றுத் தந்த படங்களில் ஒன்றாகும். இதில் அம்மம்மா வந்தது இங்கு சிங்ககுட்டி என்ற பாடல் பெரிய வரவேற்பை பெற்ற பாடலாக இருந்தது.

இந்நிலையில் கவின் நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா பூஜையை ஏவிஎம் ஸ்டுடியோ கார்டனில் இன்று படக்குழு நடத்தியிருக்கிறது. மேலும் இந்த படத்தை டிசம்பரில் ரிலீஸ் செய்யவும் படக்குழு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக ஆங்கில தலைப்பை வைக்காமல் கமல் படத்தின் டைட்டிலை வைத்திருப்பதே படத்துக்கு நல்ல ஒரு கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்