- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடேங்கப்பா... இத்தனை கோடி ரூபாய்க்கு வர்த்தகமானதா கவின் திரைப்படம்... ஸ்டார் படத்தின் மூலம் ஸ்டார் அந்தஸ்து...

அடேங்கப்பா… இத்தனை கோடி ரூபாய்க்கு வர்த்தகமானதா கவின் திரைப்படம்… ஸ்டார் படத்தின் மூலம் ஸ்டார் அந்தஸ்து பெரும் நடிகர்…

- Advertisement -

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து முன்னேறிக் கொண்டிருப்பவர் நடிகர் கவின். இயக்குனராக வேண்டும் என்னும் ஆசையில் வந்த அவர், ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இன்று நேற்று நாளை திரைப்படத்தில், ஒரு மிகச்சிறிய ரோலில் அவர் நடித்திருந்தார்.

 

- Advertisement -

இதேபோல் விக்ரம் பிரபு நடித்திருந்த சத்ரியன் படத்திலும் கவின் வந்து போவார். இந்த நிலையில் விஜய் – நெல்சன் ஆகியோர் கூட்டணியில் உருவான பீஸ்ட் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பு கவினுக்கு கிடைத்தது. இதற்காக படத்தின் பூஜையிலும் அவர் பங்கேற்றார்.

 

- Advertisement -

ஆனால் அவருக்கு கதாநாயகன் ஆக வாய்ப்பு கிடைத்ததால் கவின், பீஸ்ட் படத்தில் பணி புரியும் வேலையை விட்டு உதறினார். இப்படியான சூழலில் அவர் கதாநாயகனாக அறிமுகமான லிப்ட் திரைப்படம், வெளியானது. விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. அதில் என்ன மயிலு பாடலும் ரசிகர்களை முணுமுணுக்க வைத்தது.

 

இந்த திரைப்படத்தை தொடர்ந்து கவின் அடுத்ததாக டாடா படத்தில் நடித்தார். நடிகரின் திரை உலக பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை அந்த திரைப்படம் கொடுத்தது. தந்தைக்கு மகனுக்கும் இடையேயான உறவு, பாசம், காதல் என அனைத்தையும் சரி விகிதத்தில் காட்டிய அந்த திரைப்படம், ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

 

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், வசூல் ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது. இப்படியான சூழலில் தான் கவின் அடுத்ததாக ஸ்டார் படத்தில் நடித்திருக்கிறார். பியார் பிரேம காதல் படத்தின் இயக்குனர் இளன் தான் இதன் இயக்குனர். முதலில் ஹரிஷ் கல்யாணுக்கு சென்ற அந்த திரைப்படம், பின்னர் கவின் வசம் ஆனது.

 

இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. சாதாரண ஒரு இளைஞர், தனது வாழ்க்கையில் திரையுலக நட்சத்திரமாக மாறத் துடிக்கும் கதை தான் ஸ்டார் திரைப்படம் என்பது அதன் ட்ரெய்லரை பார்க்கும்போது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் படத்திற்கு வலுகூட்டி இருக்கிறது. ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பால், ஸ்டார் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ஏழு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாதாரண நடிகருக்கு இத்தனை கோடி ரூபாயில் வர்த்தகமாக இருப்பது பெரிய விஷயம் என்று சினிமா விமர்சகர்களும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்