- Advertisement -
Homeபொழுதுபோக்குபொறுத்து பொறுத்து பார்த்தேன், 3வது நாள் அவன் தலையில் கல்லை தூக்கி போட்டு விட்டேன் -...

பொறுத்து பொறுத்து பார்த்தேன், 3வது நாள் அவன் தலையில் கல்லை தூக்கி போட்டு விட்டேன் – நடிகை கயாடு லோஹர் சொன்னதைக் கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்!

- Advertisement -

பொதுவாகவே பெண்கள் பார்ப்பதற்கு அழகு பதுமைகளாகவும் மென்மையானவர்களாகவும் தெரிந்தாலும் அவர்களுக்குள் மூர்க்கத்தனம் உண்டு. சில நேரங்களில் ஆண்களே செய்ய தயங்கும் சில தடாலடியான விஷயங்களை கூட பெண்கள் துணிச்சலாக செய்து முடித்து விடுவார்கள். அந்த அசாத்திய மன தைரியம் பெண்களிடம் மறைந்து உள்ளது. அதில் நடிகைகளும் விதிவிலக்கல்ல.

தென்னிந்திய சினிமா துறையில் ஒரு பிஸியான நடிகையாக வலம் வருபவர் கயாடு லோஹர். இதயம் முரளி இம்மோர்ட்டால் ஐ யம் கேம் சூர்யா 48 என பல திரைப்படங்களை தற்போது அவர் தனது கைவசம் வைத்திருக்கிறார். இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏற்கனவே டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் அதர்வா முரளியுடன் கயாடு லோஹர் நடித்த இதயம் முரளி படம் அடுத்ததாக வெளிவர இருக்கிறது. இந்த படம் வருகிற 10ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதயம் என்ற படத்தில் நடிகர் முரளி நடித்த போது அந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இப்போது அவரது மகன் அதர்வா தனது அப்பா பெயரில் இதயம் முரளி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இதயம் முரளி படத்துக்காக சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை கயாடு லோஹர் தனது சிறிய வயதில் ஏற்பட்ட ஒரு அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது கயாடு லோஹர் கூறியதாவது, நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எனது வீட்டுக்கு அருகில் உள்ள டியூஷன் வகுப்புகளுக்கு செல்வது வழக்கம். அப்போது ஒரு பையன் என்னை ஈவ்டீசிங் செய்தான்.

முதல் நாள் சரி போகட்டும் என்று நான் கண்டுக்காமல் விட்டுவிட்டேன். இரண்டாம் நாளும் அப்படியே நடந்தது. அவன் ஈவ் டீசிங் செய்தான். ஆனால் மூன்றாவது நாளும் அவன் மீண்டும் மீண்டும் எல்லை மீறியதும் எனக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. கோபத்தின் உச்சத்துக்கே சென்று விட்டேன்.

உடனே அங்கிருந்து ஒரு பெரிய கல்லை எடுத்து அவன் தலை மேலே வீசி விட்டேன். அவனுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே நான் அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன். பார்ப்பதற்கு நான் மிகவும் சாதுவாகவும் அமைதியாகவும் தெரியலாம். ஆனால் யாராவது தப்பு செய்தால் அமைதியாக இருக்கக் கூடாது. கண்டிப்பாக திருப்பி அடிக்க வேண்டும் என்று நடிகை கயாடு லோஹர் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்