- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென ரூட் மாறிய பிரபல பெண் இயக்குநர், இந்த ஹீரோவை வெச்சு அந்த மாதிரி...

திடீரென ரூட் மாறிய பிரபல பெண் இயக்குநர், இந்த ஹீரோவை வெச்சு அந்த மாதிரி ஒரு படம் பண்ண போறாங்களாம் – ஏன் இப்படி ஒரு மாற்றமுன்னு தெரியலையே

- Advertisement -

இந்திய சினிமாவில், பெண் இயக்குநர்களும் பல சாதனைகளை புரிந்துக்கொண்டு தான் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் ஹோம்லி லுக்கில் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நடிகை ரேவதி, பல படங்களில் நடித்து அசத்தி இருக்கிறார். ஆனால், அவர் ஒரு பெண் இயக்குநராக இருந்து சில படங்களை இயக்கியவர் என்பது, பலருக்கு தெரியாது.

அதே போல் பழம்பெரும் நடிகை பானுமதி, சண்டி ராணி போன்ற படங்களை இயக்கியவர்தான். நடிகை சுஹாசினி மணிரத்னம் இயக்கிய படம் இந்திரா.அதுபோல் 3, வை ராஜா வை, கோச்சடையான் படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இப்போது லால் சலாம் படத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா ஒரு இயக்குநர்தான். அவர்தான் வணக்கம் சென்னை, காளி ஆகிய படங்களின் இயக்குநர்.

- Advertisement -

சூரரை போற்று, இறுதிச்சுற்று படங்களை இயக்கிய பெண் இயக்குநர் சுதா கொங்காரா, இன்னும் தமிழ் சினிமாவில் அனிதா உதீப், மதுமிதா, வி. பிரியா, லட்சுமி ராமகிருஷ்ணன் என பல பெண் இயக்குநர்கள் இருந்து வருகின்றனர் அதுபோல், கீது மோகன்தாஸ் பிரபல நடிகையாக மட்டுமின்றி, தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய முக்கிய பெண் இயக்குநராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில், மனநலம் தவறிய ரேகாவின் குழந்தையாக, சத்யராஜ்- சுஹாசினி வளர்க்கும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்தான் கீது மோகன்தாஸ். கேரளாவை சேர்ந்த இவரது இயற்பெயர் காயத்ரி மோகன்தாஸ். கடந்த 1988ம் ஆண்டில், மோகன்லால் நடிப்பில் வெளிவந்த ஒண்ணு முதல் பூஜ்யம் வாரே, என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அவர் அறிமுகமானார்.

- Advertisement -

அதன்பிறகுதான், தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். தொடர்ந்து, பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மாதவன் ஜோடியாக நளதமயந்தி படத்திலும், அதையடுத்து பொய் என்ற படத்திலும் கீது மோகன்தாஸ் இளம் நடிகையாக ரசிகர்களுக்கு காட்சியளித்தார்.

சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, திரைப்படங்களை இயக்குவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட கீது மோகன்தாஸ், கடந்த 2014ம் ஆண்டில் இந்தியில் இயக்கிய லையர்ஸ் டைஸ் என்ற படம், இரண்டு தேசிய விருதுகளை பெற்றது. இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். பல நல்ல படங்களை இயக்கி இருக்கிறார். நடிகையாக, இயக்குநராக பல சிறப்பு விருதுகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது, கேஜிஎப் நாயகன் யாஷ் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை இயக்குகிறார். கேங்ஸ்டர் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட கமர்ஷியல், ஆக்‌ஷன் படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. மனம் உருகும்படியான வாழ்வியல் யதார்த்த படங்களை இயக்கிய கீது மோகன்தாஸ் இப்படி சண்டை, ரத்தம், வன்முறை காட்சிகள் கொண்ட ரகுடு நிறைந்த படத்தை இயக்க திடீர் முடிவெடுத்தது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. ஒருவேளை, லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களை சமீபத்தில் அவர் பார்த்திருப்பாரே என சிலர் கிண்டலாக கமெண்ட் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்