தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் கருணாஸ். பாலா இயக்கத்தில் லொடுக்கு பாண்டி கேரக்டரில் நடித்து கருணாஸ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். ரஜினி கமல் அஜீத்குமார் என முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் காமெடி ரோலில் நடித்தவர் கருணாஸ்.
அதன்பிறகு அம்பாசமுத்திரம் அம்பானி திண்டுக்கல் சாரதி போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். இப்போது குணச்சித்திர நடிகராக நடித்து வரும் அரசியல்வாதியாகவும் இருக்கிறார். வருகிற சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் வேட்பாளராகவும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ் நெடுஞ்சாலை படத்தில் ஓட்டல் கடை சிறுவனாக நடித்திருந்தார். பிறகு அசுரன் விடுதலை 2 வாத்தி போன்ற படங்களில் நடித்த அவர் இப்போது ஹீரோவாக நடித்து வெளியான படம் யூத். இந்த படத்தின் இயக்குனரும் கென் கருணாஸ்தான் என்பது கவனிக்கத்தக்கது. இந்த படத்துக்கு நல்ல வரவேற்பும் பாசிட்டிவ் விமர்சனங்களும் கிடைத்து வருகிறது.
யூத் படத்தின் பிரமோசன் விழாவில் நடிகர் தனுஷ் கலந்துக்கொண்டு நடிகர் கென் கருணாஸ் குறித்து பாராட்டிப் பேசினார். அசுரன் படத்தில் தன்னுடன் கென் கருணாஸ் நடித்த அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார். தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் புதுமுக கதாநாயகன் இயக்குனர் கென் கருணாஸ் குறித்த பேசிய பெரிய அளவில் பிரமோசனாக இருந்தது.
ஆனால் யூத் படத்தில் கென் கருணாஸ், நடிகர் சிம்புவின் தீவிர ரசிகராக தன்னை காட்டியிருக்கிறார். தனது படத்தின் பிரமோசனுக்கு மேடையில் தனுஷை பேச வைத்த கென் கருணாஸ், திரையில் நடிகர் சிம்புவின் ரசிகராக தன்னை அடையாளப்படுத்தி சிம்புவின் ஆதரவையும் பெற்றிருக்கிறார்.
இதற்கிடையே யூத் படம் குறித்து பாராட்டி நடிகர் சிம்பு ஒரு டிவீட் செய்த நிலையில் அதுவும் கென் கருணாஸ்க்கு பெரிய அளவில் டிரண்டிங் ஆகி உதவியிருக்கிறது. எனினும் சிம்பு ரசிகராக யூத் படத்தில் வருவதால் நடிகர் சிம்புவை தானும் தனது படக்குழுவும் நேரில் சந்திக்க கென் கருணாஸ் அப்பாயின்ட்மென்ட் கேட்டிருக்கிறார். சிம்பு இப்போது அரசன் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் இன்னும் அதற்கான நேரம் தரவில்லை என்று கூறப்படுகிறது.





