- Advertisement -
Homeபொழுதுபோக்குஉலகளவில் 100 கோடி வசூலை கடந்த குபேரா… போஸ்டர் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் - ஆனா...

உலகளவில் 100 கோடி வசூலை கடந்த குபேரா… போஸ்டர் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் – ஆனா தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி நஷ்டமா?

- Advertisement -

நடிகர் தனுஷ் நடித்த குபேரா படம் கடந்த 20ம் தேதி வெளியானது. தெலுங்கில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் பிச்சைக்காரன் கேரக்டரில் இந்த படத்தில் நடித்திருந்தார். படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் தீபக் என்ற முக்கிய கேரக்டரில் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவும் நடித்திருந்தனர்.

தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான இந்த படம் தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அங்கு நடந்த சக்சஸ் மீட்டில் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி கலந்துக்கொண்டு நடிகர் தனுஷை கட்டித் தழுவி பாராட்டி இருக்கிறார். மேலும் இந்த நடிப்புக்கு கண்டிப்பாக தனுஷூக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.

- Advertisement -

அதே நேரத்தில் குபேரா படத்தில் நடித்த போது என்னை ஹீரோவாக நான் உணர்ந்தேன். இந்த படத்தின் கதை என்னை மையப்படுத்தியதாகவே இருந்தது. இந்த படத்தில் நான்தான் ஹீரோ என்று நடிகர் நாகர்ஜூனா பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. பல விமர்சகர்கள், படத்தின் ஹீரோ தனுஷ் என்றாலும் அதிக ஸ்கோர் செய்தது நடிகர் நாகர்ஜூனாதான் என்றும் கூறியிருந்தனர்.

குபேரா படத்துக்கு தெலுங்கில் கிடைத்த அளவுக்கு தமிழில் வரவேற்பு கிடைக்கவில்லை. இங்கு குபேரா படத்தை பலரும் கடுமையாகவே விமர்சித்தனர். 3 மணி நேரம் இந்த படம் ஒன்றுமே இல்லை. திரைக்கதை மிகவும் மந்தமாக உள்ளது. பல காட்சிகள் படத்தில் இருப்பது எதற்கு என்றே தெரியவில்லை என்றும் கூறினர். தனுஷ் நடிப்பும் பல இடங்களில் சொதப்புகிறது என்றும் கூறினர்.

- Advertisement -

மேலும் ராஷ்மிகா மந்தனா நேஷனல் கிரஷ் நடிகையாக உள்ள நிலையில், நடிப்பிலும் கேரக்டரிலும் மேக்கப்பிலும் அவரை மிகவும் டல்லாக காட்டி அவரது இமேஜை டேமேஜ் செய்துவிட்டனர் என்றும் குறை கூறினர். தனுஷ், ராஷ்மிகா மந்தனா இருவரும் பெரிய இயக்குனர் என்று சேகர் கம்முலாவை நம்பி ஏமாந்து விட்டனர் என்று வலைப்பேச்சு அந்தணன் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

இந்நிலையில் குபேரா படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிட குபேரா படத்தை ரூ. 20 கோடி கொடுத்து வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ் ராகுலுக்கு ரூ. 5 கோடி மட்டுமே ஷேர் கிடைத்துள்ளது. அவருக்கு ரூ. 15 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வலைப்பேச்சு ஜெ பிஸ்மி ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்