- Advertisement -
Homeபொழுதுபோக்குபடம் காட்டு மொக்கைன்னு சொல்றாங்க… ஆனா 2 நாளில் இத்தனை கோடி வசூலா? - வாய்...

படம் காட்டு மொக்கைன்னு சொல்றாங்க… ஆனா 2 நாளில் இத்தனை கோடி வசூலா? – வாய் பிளந்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்று முன்தினம் (20ம் தேதி) வெளியான படம் குபேரா. இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடித்த இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பிச்சைக்காரனாக இருக்கும் படத்தின் ஹீரோ, குபேரானாக மாறுவதுதான் இந்த படத்தின் கதைக்களமாக உள்ளது.

குபேரா படத்தை ஒரு தரப்பினர் நல்ல படம் என்று சொன்னாலும் படம் பார்த்த பலரும் எதிர்மறை விமர்சனங்களை தான் கூறுகின்றனர். பிச்சைக்காரன் என்றால் இப்படிப்பட்ட சில வரைமுறைக்குள்தான், ஹீரோவை காட்ட வேண்டுமா என இயக்குனருக்கு ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த படத்தின் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன என்றும் சந்தேகம் கேட்கின்றனர்.

நல்லவனா, பணக்காரனா, பிச்சைக்காரனா என்பதில் எதை வெளிப்படுத்துவது எனத் தெரியாமல் தனுஷ் இந்த படத்தில் திணறுகிறார் என்றும் ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். நல்ல நடிகராக பெயர் வாங்கிய நடிகர் தனுஷ், இந்த படத்தில் பல காட்சிகளில் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறி திணறி திண்டாடி நடித்திருப்பது திரையில் அப்பட்டமாக தெரிகிறது என்றும் கூறுகின்றனர்.

வெறும் 3 நிமிடம் ரீல்ஸ் ஆக எடுக்க வேண்டிய குபேரா கதையை 3 மணி நேரம் படமாக எடுத்து ரசிகர்களை சாவடித்து இருக்கின்றனர். இந்த படத்தில் லாஜிக் மிஸ்டேக் அப்படியே கொட்டிக் கிடக்கிறது. படம் பார்ப்பவன் சந்தேகம் கேட்க ஆரம்பித்தால் படம் அரை மணி நேரம் கூட தொடர்ந்து பார்க்க முடியாது என்கிற அளவுக்கு ஒரு மோசமான கதை இது என்றும் ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். இந்த படத்தில் நடித்துவிட்டா, தனுஷ் அந்த பில்டப் பண்ணி ஒரு செங்கல்லை கூட ஆட்ட முடியாது என்று பேசினார் என்றும் ரசிகர்கள் கோபப்படுகின்றனர்.

நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ரசிகர்களுடன் கனெக்ட் ஆகவே இல்லை. எந்த கேரக்டருமே படத்தில் பெரிய அளவில் ரசிகர்களுடன் தொடர்பில் இல்லை. ஏதோ படம் ஓடுகிறது, படம் பார்க்கிறோம் என்ற மனநிலையில்தான் ரசிகர்கள் படம் பார்க்கின்றனர். ஒவ்வொரு காட்சியும் எதற்காக அவ்வளவு நீளம் என்பது புரியவே இல்லை என்றும் ரசிகர்கள் புலம்புகின்றனர்.

இதற்கிடையே தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் வெளியான குபேரா படம் முதல் நாளில் 25 கோடி ரூபாய் வசூலித்தது. 2வது நாளில் உலகளவில் மொத்தம் 55 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தெரிய வருகிறது. குபேரா காட்டு மொக்கை படம் என்று ப்ளு சட்டை மாறன் விமர்சித்திருந்த நிலையில், 2 நாட்களில் குபேரா 55 கோடி ரூபாய் வசூலித்து விட்டதா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாய் பிளக்கின்றனர்.

சற்று முன்