- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னப்பா இது… அதுக்குள்ள குபேரா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிச்சுட்டாங்க… ஆச்சரியப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்கள்!

என்னப்பா இது… அதுக்குள்ள குபேரா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிச்சுட்டாங்க… ஆச்சரியப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் குபேரா, கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி இந்த படம் வெளியானது. தெலுங்கு தமிழ் இந்தி கன்னடம் மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

குபேரா படத்தில் முக்கிய கேரக்டரில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜூனா நடித்திருந்தார். மேலும் படத்தில் ராஷ்மிகா மந்தனாவும் நடித்திருந்தார். குபேரா படம் 100 கோடி ரூபாய்க்கு வசூல் சாதனை புரிந்த படமாக இருந்த போதிலும் தமிழ்நாட்டில் குபேரா தோல்வி படமாகவே இருந்தது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் ரூ. 17 கோடி மட்டுமே வசூலித்தது.

- Advertisement -

அதனால் குபேரா படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட வினியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பலத்த நஷ்டமே ஏற்பட்டது. அதிலும் நடிகர் தனுஷ், குபேரா பட இசை வெளியீட்டு விழாவில், ஒரு செங்கல்லை கூட அசைக்க முடியாது; தம்பிகளா கொஞ்சம் ஓரமா போய் விடுங்க என்று தெனாவெட்டாக பேசியது எல்லாம் ரசிகர்களை அதிருப்தியடைய செய்தது.

ஆனால் ஒரு தரப்பில் குபேரா படத்தில் பிச்சைக்காரன் கேரக்டரில் தனுஷ் நடிப்பு மிக சிறப்பாகவே இருந்தது என்று பாராட்டினார்கள். ஆனால் 3 நிமிட கதையை 3 மணி நேர படமாக எடுத்து ரசிகர்களை விரக்தியடைய செய்துவிட்டார்கள் என்றும் ஒரு தரப்பினர் விமர்சனம் செய்தனர். ஆக மொத்தத்தில் குபேரா படம் தமிழில் படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ஒரு சில படங்கள் தியேட்டரில் மோசமான விமர்சனத்தை பெற்றாலும், ஓடிடியில் வெளியாகும் போது ரசிகர்கள் மத்தியில் அந்த படத்துக்கு நல்ல ஆதரவும் வரவேற்பும் கிடைப்பது உண்டு. அந்த மேஜிக் குபேரா படத்தில் நடக்குமா என்பது விரைவில் தெரிந்து விடும். ஏனெனில் குபேரா ஓடிடி ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 18ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் குபேரா படம் வெளியாகிறது. தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் கன்னடம் என 5 மொழிகளில் வரும் 18ம் தேதி குபேரா படத்தை ரசிகர்கள் காணலாம். கடந்த மாதம் 20ம் தேதி வெளியான இந்த படம் சரியாக 4 வாரங்களில் ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்