- Advertisement -
Homeபொழுதுபோக்குலால் சலாம் படத்துக்கு வந்த திடீர் சிக்கல், பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை -...

லால் சலாம் படத்துக்கு வந்த திடீர் சிக்கல், பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை – ஏமாற்றத்தில் ரஜினி ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய படம் லால் சலாம். இதில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் கேமியோ ரோலில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். இதில் இரட்டை ஹீரோக்களாக விக்ராந்த், விஷ்ணு விஷால் நடித்துள்ளனர். இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சில காட்சிகளில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

லால் சலாம் படத்தை பொறுத்த வரை கவுரவ வேடத்தில் ரஜினிகாந்த் நடித்தாலும், ரசிகர்களை ஏமாற்றாத வகையில், இந்த படத்தில் 45 நிமிடங்களுக்கு மேல் ரஜினிகாந்த் வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 22 சீன்களில் ரஜினி வருகிறார். விளையாட்டிலும் மதத்தை கலந்துக்கிட்டீங்களே என்ற டீசர் வசனமே ரஜினிக்கு மாஸ் என்ட்ரியை கொடுத்துள்ளது.

- Advertisement -

இந்த படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்துள்ள விக்ராந்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு, அவர் அதிகமாக காட்சிகளில் வருகிறார். அவருக்கான முக்கியத்துவத்தை குறைக்க, அவர் வரும் காட்சிகளை குறையுங்கள். அல்லது, எனக்கான காட்சிகளை அதிகப்படுத்துங்கள் என நடிகர் விஷ்ணு விஷால் கிளப்பிய பஞ்சாயத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வரும் பொங்கல் பண்டிகையன்று லால் சலாம், கேப்டன் மில்லர், அரண்மனை 4 என நான்கு படங்கள் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதில் அரண்மனை 4 போட்டியில் இருந்து விலகிக் கொண்டது. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் வெளியாகும் அரண்மனை 4க்கு, ஆந்திராவில் நிறைய போதிய தியேட்டர்கள் கிடைக்காததால், இந்த படத்தை சுந்தர் சி தள்ளி வைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கிடையே லால் சலாம் படமும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகாது என்ற தகவலும் இப்போது கிடைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் லால் சலாம் படத்தை டிஜிட்டல் ரைட்ஸ் ஓடிடி தளங்கள் மற்றும் சாட்டிலைட் சேனல்கள் வாங்கிக்கொள்ள முன்வரவில்லை. இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் படத்தை தயாரித்த லைகா நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது.

அதாவது முக்கிய படங்கள் ரிலீஸ் ஆகும் முன்பே டிஜிட்டஸ் ரைட்ஸ் ஓடிடி தளங்கள் மற்றும் சாட்டிலைட் சேனல்களுக்கு பல கோடி ரூபாய்க்கு, கணிசமான தொகைக்கு விற்கப்படுகிறது. இது தயாரிப்பாளருக்கு பலத்த லாபமாக அமைகிறது. அதே வேளையில் தியேட்டரில் அந்த படம் ஓடாத போது ஓடிடி தளங்களுக்கும் நஷ்டமே ஏற்படுகிறது. அதனால் லால் சலாம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத பட்சத்தில், ஓடிடி தளத்துக்கு பலத்த அடி விழும். நஷ்டம் ஏற்படும் என்பதால், ரிலீஸ்க்கு முன் படத்தை வாங்க ஓடிடி தளங்கள் முன்வரவில்லை. அதனால் லால் சலாம் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

- Advertisement -

சற்று முன்