- Advertisement -
Homeபொழுதுபோக்குகுறி வெச்சா இரை விழணும்… இந்த முறையும் குறி தப்பாது - சுந்தர் சி இயக்கிய...

குறி வெச்சா இரை விழணும்… இந்த முறையும் குறி தப்பாது – சுந்தர் சி இயக்கிய கேங்கர்ஸ் படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களை ஏமாற்றம் அடைய விடாத நல்ல இயக்குனர்களில் ஒருவர் என்றால் அது இயக்குனர் சுந்தர் சி என்று தாராளமாக சொல்லலாம். ஏனென்றால் அவரது படங்களுக்கு சென்றால் நிச்சயமாக இரண்டரை மணி நேரத்தை ஜாலியாக கழித்து விட்டு வரலாம். ரசிகர்களை மனம் விட்டு சிரிக்க வைத்து விடுவார்.

இயக்குனர் சுந்தர் சி இயக்கும் படங்கள் என்றாலே அதில் காதல் காமெடி கவர்ச்சி தூக்கலாக இருக்கும். குடும்ப சென்டிமென்ட் நிறைய இருக்கும். கவுண்டமணி செந்தில் வடிவேல் சந்தானம் யோகிபாபு கோவை சரளா மனோபாலா போன்றவர்களை நடிக்க வைத்து படத்தை ஜாலியான கலாட்டா படமாக மாற்றி விடுவார்.

- Advertisement -

அதற்கு நல்ல உதாரணமாக 12 ஆண்டுகளுக்கு முன் சுந்தர் சி இயக்கத்தில் உருவான மதகஜ ராஜா படம் கடந்த பொங்கலுக்கு ரிலீஸாகி ரூ. 50 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. திரில் திகில் நிறைந்த அரண்மனை அரண்மனை 2 அரண்மனை 3 அரண்மனை 4 என சுந்தர் சி இயக்கிய படங்களும் சக்கைப் போடு போட்டு வருகின்றன.

அடுத்ததாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கேங்கர்ஸ் படம் வருகிற ஏப்ரல் மாதம் 24ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் வடிவேலு மொத்தம் 5 கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். அதிலும் ஆண்ட்டி கேரக்டரில் பெண் வேடத்தில் வடிவேலு நடிப்பு, வேற லெவலில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

ஏற்கனவே வின்னர் கிரி தலைநகரம் போன்ற படங்களில் வடிவேலு சுந்தர் சி காம்பினேஷன் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், நீண்ட ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அவர்களது காம்போ, ரசிகர்களுக்கு கமகமக்கும் பிரியாணி வகைகள் நிறைந்த நகைச்சுவை விருந்தாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

கேங்கர்ஸ் படத்தை பொறுத்த வரை செகன்ட் ரவுண்டில் இருக்கும் நடிகர் வைகைப்புயல் வடிவேலுவுக்கு கம்பேக் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அரண்மனை 4 மதகஜ ராஜா படங்களின் அபார வெற்றிக்கு பிறகு கேங்கர்ஸ் படம் ரூ. 100 கோடி வசூலித்து இயக்குனர் சுந்தர் சிக்கு ஹாட்ரிக் வெற்றியை தரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்