- Advertisement -
Homeபொழுதுபோக்குகைதி 2 படம் குறித்து சுடச்சுட வெளியான லேட்டஸ்ட் அப்டேட் - ஒரு சம்பவம் இல்லே…...

கைதி 2 படம் குறித்து சுடச்சுட வெளியான லேட்டஸ்ட் அப்டேட் – ஒரு சம்பவம் இல்லே… ரெண்டு சம்பவம் தரமா நடக்கப் போகுது… 2 அண்ணன்களும் படத்துல வர்றாங்க!

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்போது கூலி படத்தை முடித்துவிட்டார். அந்த படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. பிரமோ பணிகளும் விரைவில் சூடுபிடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதற்கான பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார்.

கூலி படம் ரிலீஸான பிறகு லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை இயக்க உள்ளார். இது ஏற்கனவே வெளியான படத்தின் 2ம் பாகமாக உருவாகிறது. கடந்த 2019ம் ஆண்டில் வெளியான கைதி படம் மாபெரும் வெற்றிப் படமாக இருந்தது. இந்த படத்தில் கதாநாயகி இல்லை. பாடல் காட்சி இல்லை. காமெடியும் இல்லை. ஆனால் படம் மாஸ் ஹிட் ஆனது.

சிறையில் கைதியாக இருந்து விடுதலை ஆகி வரும் கார்த்தி, போலீசாருக்கு ஏற்படும் ஒரு சிக்கலில், அவர்களை காப்பாற்ற வேண்டிய ஒரு நெருக்கடிக்கு ஆளாகிறார். ஒரு லாரியில் அத்தனை போலீஸ் அதிகாரிகளையும் தூக்கி போட்டுக்கொண்டு பல மணி நேரம் பயணிக்கும் நிலையில், எதிரிகள் குறுக்கீடுகளை எப்படி சமாளித்து கார்த்தி ஜெயிக்கிறார் என்பதே கதை.

டில்லி கேரக்டரில் கார்த்தியின் அட்டகாசமான நடிப்பு படத்தை வேற லெவலில் கொண்டு சென்றது. இந்த படம் 57 இரவுகளில் படமாக்கப்பட்டது. பகலில் அரை நாள் மட்டுமே ஷூட்டிங் நடத்தப்பட்டது. இப்போது இந்த படத்தின் 2ம் பாகமாக கைதி 2 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கைதி 2 படத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் கைதி 2 படத்திலும் பாடல்கள், கதாநாயகி போன்ற விஷயங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை யோசிக்கவே இல்லை என்பதால், இந்த படத்தில் 100 சதவீதம் அனுஷ்கா நடிக்க வாய்ப்பில்லை. இது தவறான தகவலாக உலா வருகிறது.

அதே நேரத்தில் நடிகர் கார்த்தியின் அண்ணன் சூர்யா தான் இந்த படத்தில் பிரதான வில்லனாக நடிக்க உள்ளார். அண்ணனும் தம்பியும் ஆக்ரோஷமான சண்டை காட்சிகளில் நடிக்கும் அளவுக்கு படம் தரமான சம்பவமாக உருவாகிறது. இதில் மற்றொரு மூத்த அண்ணன் கமல்ஹாசனும் நடிக்கிறார் என்பதுதான் கூடுதல் தகவல். கார்த்தி சூர்யா கமல்ஹாசன் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க உள்ளதால் தரமான சம்பவமாக கைதி 2 உருவாகிறது.

சற்று முன்