- Advertisement -
Homeபொழுதுபோக்குசிம்பு - வெற்றிமாறன் காம்போவில் உருவாக வேண்டிய எஸ்டிஆர் 49 படம்… லேட்டஸ்ட் நிலவரம் என்ன?...

சிம்பு – வெற்றிமாறன் காம்போவில் உருவாக வேண்டிய எஸ்டிஆர் 49 படம்… லேட்டஸ்ட் நிலவரம் என்ன? தயாரிப்பாளர் தாணு பின்வாங்க யார் காரணம்?

- Advertisement -

விடுதலை 2 படத்துக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்குவதாக இருந்தது. அதே போல் ரெட்ரோ படத்துக்கு பின் நடிகர் சூர்யாவுக்கும் வாடிவாசல் படத்தில்தான் நடிக்க வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென இந்த படம் டிராப் ஆகி விட்டது. சில முரண்பட்ட காரணங்களால் இருவரும் வாடிவாசல் படம் வேண்டாம் என்ற தீர்மானமான முடிவுக்கு வந்துவிட்டனர்.

எனினும் வாடிவாசல் படத்துக்காக தயாரிப்பாளர் தாணுவிடம் இயக்குனர் வெற்றிமாறன் ரூ. 19 கோடி வரை ஏற்கனவே சம்பளம் வாங்கி விட்டதால் அதற்காக ஒரு புதிய படத்தை தயாரிப்பாளர் தாணுவுக்கு வெற்றிமாறன் இயக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. அதனால் நடிகர் சிம்பு நடிக்கும் அவரது அடுத்த படம் எஸ்டிஆர் 49 படத்தை வெற்றிமாறன் இயக்க முடிவானது.

இதில் திடீரென நடிகர் சிம்பு சம்பள விஷயத்தில் பிரச்னை செய்ததால் இந்த படம் டிராப் ஆனதாக ஒரு தகவல் வெளியானது. முதலில் ரூ. 10 கோடி சம்பளம் அட்வான்ஸ் அடுத்து பிராபர்டி ஷேர் என கமிட் ஆன நடிகர் சிம்பு, திடீரென தனது 40 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக தகவல் பரவியது. மேலும் வெற்றிமாறனும் தனது சம்பளத்தை ரூ. 25 கோடியாக உயர்த்தியதாக கூறப்பட்டது.

இந்த சூழலில் தற்போது லேட்டஸ்ட் தகவலாக வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த எஸ்டிஆர் 49 படம் டிராப் ஆனதா அல்லது வேறு தயாரிப்பு நிறுவனத்துக்கு கைமாறியதா அல்லது படப்பிடிப்பு தள்ளிப் போகிறதா என்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது. அதாவது இந்த படம் இப்போது தடுமாறி நிற்க காரணம் இயக்குனர் வெற்றிமாறன் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சிம்பு நடிக்கும் இந்த படத்தின் பட்ஜெட்டை இயக்குனர் வெற்றிமாறன் 150 கோடி ரூபாய் வரை அதிகரித்து விட்டதாக கூறப்படுகிறது. ஒரு பிரமாண்டமான படமாக இந்த படத்தை எடுக்க இயக்குனர் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். இந்த படத்துக்காக அமைக்கப்படும் ஷெட்டே பல கோடி ரூபாய் செலவாகும் என்று தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே வாடிவாசல் படத்துக்காக 45 கோடி ரூபாய் வரை கடன் பெற்று அதன் வட்டியுடன் கணிசமான தொகை சேர்ந்த நிலையில் அத்துடன் இந்த படத்தின் பட்ஜெட்டும் 150 கோடி ரூபாய்க்கு மேல் எகிறியதால் அப்செட் ஆன தயாரிப்பாளர் தாணு இந்த படத்தை தயாரிக்கலாமா, வேண்டாமா என்ற தயக்கத்தில் இருந்து வருகிறார். படத்தின் பட்ஜெட் தான் இப்போது சிம்பு, வெற்றிமாறன் படத்துக்கு பெரிய பிரச்னையாக மாறியதாக தெரிய வந்துள்ளது.

சற்று முன்