- Advertisement -
Homeபொழுதுபோக்குவிரைவில் கதாநாயகன் அவதாரம் எடுக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனுஷ் பட டைரக்டர்தான் லோகேஷை இயக்கப்...

விரைவில் கதாநாயகன் அவதாரம் எடுக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனுஷ் பட டைரக்டர்தான் லோகேஷை இயக்கப் போகிறாரா? – போடு வெடிய…

- Advertisement -

தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து கைதி மாஸ்டர் விக்ரம் லியோ ஆகிய படங்களை இயக்கினார். இதில் கார்த்தி நடித்த கைதி கமல் நடித்த விக்ரம் படங்கள் பிளாக்பஸ்டர் படங்களாக இருந்தன.

விஜய் நடித்த மாஸ்டர் லியோ ஆகிய படங்களும் வியாபார ரீதியாக மாஸ் ஹிட் படங்களாக இருந்தன. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்திருக்கிறார். வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளது. படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் துவங்கி இருக்கிறார். ஜி ஸ்குவாட் என்ற பெயரில் உருவான இந்த நிறுவனம் மூலம் இப்போது மாஸ்டர் ராகவா லாரன்ஸ் மாதவன் நிவின் பாலி ஹரீஷ் கல்யாண் நடிக்கும் மல்ட்டி ஸ்டார் படமாக உருவாகி வருகிறது. தொடர்ந்து பல படங்களை தயாரிக்கவும் லோகேஷ் கனகராஜ் ஆர்வமாக இருந்து வருகிறார்.

நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனுடன் இனிமேல் என்ற இசை வீடியோ ஆல்பத்தில் அவருக்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார். 2 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த இசை ஆல்பம் இணையத்தில் பெரிய அளவில் வைரலானது. ஆனாலும் சிலர் ஸ்ருதிஹாசனின் லோகேஷ் கனகராஜ் நெருக்கமாக நடித்ததை பார்த்து, விமர்சிக்கவும் செய்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அவதாரம் எடுக்கிறார். விரைவில் ஒரு புதிய படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கிறார். ஆனால் அந்த படத்தை இயக்கப் போவது அவர் இல்லை. கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன்தான் இந்த படத்தின் இயக்குனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்சன் படமாக உருவாகும் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ்தான் நாயகனாக நடிக்கிறார். இதற்காக தற்போது லோகேஷ் கனகராஜ் தற்காப்பு கலைகளை கற்று வருகிறார். கைதி 2 விக்ரம் 2 ரோலக்ஸ் படங்களை இயக்க உள்ள லோகேஷ் கனகராஜ், இதற்கிடையே திடீரென கதாநாயகன் அவதாரம் எடுப்பது தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்