தெலுங்கு இயக்குனரான ராஜமௌலி பல்வேறு வெற்றி திரைப்படங்களை கொடுத்திருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய என்ட்ரியாக அமைந்தது நான் ஈ திரைப்படம் தான். ஒரு ஈ, ஒரு வில்லனை எப்படி பழி வாங்குகிறது என்பது தான் இந்த திரைப்படத்தின் கதை. அதை எந்த ஒரு அழுத்தமும் திருத்தமும் இல்லாமல், சுவாரசியமாக கொடுத்திருந்தார் ராஜமவுலி.
இதன் பிறகு பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் கொடுத்து அசர வைத்தார் இயக்குனர். தெலுங்கு சினிமாவில் முதல் முறையாக ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்ற பெருமையை இந்த திரைப்படம் பெற்றது. மேலும் தனது திரையுலகின் பெருமையை உலகறியவும் செய்தார் ராஜமவுலி.
தொடர்ந்து அவர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை இயக்கினார். இதுவும் அதிரிபுதிரியான வெற்றியைப் பெற்று, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அது மட்டுமல்லாமல் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது பெற்றது.
இதன் காரணமாக உலகமே உற்றுநோக்கும் இயக்குனராக மாறினார் ராஜமவுலி. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த திரைப்படத்திற்காக அவர் மகேஷ் பாபுவுடன் இணைந்திருக்கிறார். இதற்கான பிரி ப்ரொடக்சன் பணிகள் மட்டும் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றன. மகேஷ் பாபுவும் அந்த இடைவேளையில் பிற திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
இதில் அண்மையில் அவர் நடித்து வெளிவந்த குண்டூர் காரம் அந்த அளவு பெரிய வரவேற்பை பெறவில்லை. இப்படியான சூழலில் இருவரும் இணைந்து தற்போது சூட்டிங் சென்று இருக்கிறார்கள். படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக வருகிறார். மலையாள நடிகர் பிரித்விராஜ்க்கு மிக முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் ராஜமவுலி. இந்திய வரலாற்றை தான் இந்த திரைப்படம் கூறுவதாக கூறப்படுகிறது.
அதாவது காசியின் வரலாறு மற்றும் இந்திய புராணத்தை இந்த திரைப்படம் பேச இருப்பதாக பலரும் தெரிவிக்கிறார்கள். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஒடிசாவில் கோரட்பூரில் நடைபெற்றது. அங்கு சில முக்கியமான காட்சிகள் சண்டை காட்சிகளை படமாக்கினார் ராஜமவுலி. இதில் மகேஷ்பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் கலந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது அதற்கான படப்பிடிப்பை முடித்திருக்கிறார். அடுத்ததாக ஹைதராபாத்தில் சூட்டிங் நடைபெற இருக்கிறதாம். அதிக பொருட் செலவில் பிரம்மாண்ட முறையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.





