- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட இது சூப்பர் டெக்னிக்கா இருக்குதே? மெய்யழகன் படம் பார்க்கப் போற ரசிகர்களுக்கு இன்னொரு ட்ரீட்டும்...

அட இது சூப்பர் டெக்னிக்கா இருக்குதே? மெய்யழகன் படம் பார்க்கப் போற ரசிகர்களுக்கு இன்னொரு ட்ரீட்டும் இருக்குது – கார்த்தி தரும் சர்ப்ரைஸ் அசத்தப் போகுது!

- Advertisement -

நடிகர் கார்த்தி கடைசியாக நடித்த படம் ஜப்பான். இது அவரது 25வது படமாகவும் இருந்தது. டைரக்டர் ராஜமுருகன் இயக்கிய ஜப்பான் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஜப்பான் படத்தை தொடர்ந்து அடுத்து நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவர உள்ள படம் மெய்யழகன். 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் டைரக்ட் செய்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மெய்யழகன் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் அரவிந்த்சாமியும் நடித்திருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். வரும் 27ம் தேதி மெய்யழகன் படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. நிச்சயமாக இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெறும் என்று நடிகர் கார்த்தி கூறியிருக்கிறார்.

- Advertisement -

கைதி படத்தில் நடித்த போது இரவு நேரங்களில் சூட்டிங் பெரும்பாலும் நடந்தது. அதேபோல் மெய்யழகன் படத்திலும் இரவு நேரத்தில் தான் பெரும்பாலான சூட்டிங் நடந்தது என்று கூறிய நடிகர் கார்த்தி, கைதி படத்தின் சண்டைக் காட்சிகளில் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் பெண்டு கழட்டிவிட்டார். ஆனால் மெய்யழகன் படத்தில் சண்டை காட்சியே இல்லை என்ற தகவலையும் கூறியிருந்தார்.

தொடர்ந்து மெய்யழகன் படத்தின் டைரக்டர் பிரேம்குமார், நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் மெய்யழகன் படத்துக்கான பிரமோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். கோவையில் நடந்த மெய்யழகன் படம் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி வருவதால் அந்த நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த கங்குவா படம் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் மெய்யழகன் படம் வரும் 27ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. அந்த படம் திரையிடப்படும் தியேட்டர்கள் அனைத்திலும் சர்தார் 2 படத்தின் டீசர் திரையிட நடிகர் கார்த்தி முடிவு செய்திருக்கிறார். அதாவது மெய்யழகன் படம் பார்க்க வரும் ரசிகர்கள் அனைவரும் சர்தார் 2 படத்தின் டீசரை பார்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் சர்தார் 2 படத்துக்கு இப்போதே பிரமோ கிடைக்கும் வகையில் இந்த நூதன வழியை படக்குழுவினர் பின்பற்றுகின்றனர். ஏற்கனவே சர்தார் 2 பிரமோவுக்கான எடுத்த காட்சிகளை டீசர் போல படமாக்கி, அதற்காக சென்சார் அனுமதியும் பெற்று, அதை தியேட்டர்களில் வெளியிட உள்ளனர். அட இது சூப்பர் டெக்னிக்கா இருக்குதே என்று தமிழ் சினிமா துறையினர் பலரும் வியந்து பாராட்டுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்