- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல மலையாள நடிகர் திடீர் மறைவு; சோகத்தில் மூழ்கிய கேரள திரையுலகம் - இரங்கல் தெரிவித்த...

பிரபல மலையாள நடிகர் திடீர் மறைவு; சோகத்தில் மூழ்கிய கேரள திரையுலகம் – இரங்கல் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!

- Advertisement -

மலையாள சினிமாவில் காமெடி நடிகராக குணசித்திர நடிகராக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகர் சீனிவாசன். அவருக்கு வயது 69. உடல்நலக் குறைவு காரணமாக அவர் இன்று காலை எர்ணாகுளத்தில் காலமானார். கடந்த 1977ம் ஆண்டில் மலையாளத்தில் பிஏ பேக்கர் இயக்கிய மணிமுழக்கம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமான அவர் கடந்த 48 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 225 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் மலையாளத்தில் சில படங்களில் கதாநாயகனாக நடித்த சீனிவாசன் பிறகு மோகன்லால் மம்முட்டி போன்றவர்களுடன் அவர்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். குறிப்பாக மோகன்லால் – சீனிவாசன் இணைந்து நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

- Advertisement -

நாடோடிக்காற்று உதயநாணுதாரம், பட்டினப்பிரவேசம் போன்ற படங்கள் அதில் குறிப்பிடத்தக்கவை. சீனிவாசன் நடிகர் என்பதையும் தாண்டி கதாசிரியர் இயக்குனர் தயாரிப்பாளர் டப்பிங் கலைஞர் என பன்முகம் கொண்டவர். கிட்டத்தட்ட 45 படங்களுக்கு மேல் அவர் கதை எழுதியிருக்கிறார். குறிப்பாக பிரபல மலையாள இயக்குனர்கள் பிரியதர்ஷன் சத்யன் அந்திக்காடு கூட்டணியில் சீனிவாசன் இணைந்து கதை எழுதிய பல படங்கள், வெள்ளிவிழா கொண்டாடிய படங்களாக இருந்தன.

தமிழில் பாண்டியராஜன் நடிப்பில் வெளியான கதாநாயகன் படம், மலையாளத்தில் சீனிவாசன் எழுதிய கதையில் உருவானதாகும். இவர் எழுதிய கதையில் கதபறயும் போல் படத்தில் மம்முட்டி நடித்தார். இந்த படம்தான் தமிழில் ரஜினி நடிப்பில் குசேலன் என்ற பெயரில் ரீமேக் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1983ம் ஆண்டில் நடிகர் சீனிவாசனுக்கு சிந்தா விஷ்டாயாயா சியாமளா என்ற படத்துக்காக மத்திய அரசின் தேசிய விருது கிடைத்தது.

- Advertisement -

கேரளா அரசின் மாநில அரசு விருது, பிலிம்பேர் விருது, ஆசியாநெட் உள்ளிட்ட பல விருதுகளை நடிகராக, சிறந்த கதாசிரியராக பலமுறை பெற்றிருக்கிறார் சீனிவாசன். தனது 2019ம் ஆண்டு வரை பிஸியாக நடித்து வந்த சீனிவாசன் பிறகு காரணமாக நடிப்பிலிருந்து ஓய்வெடுத்தார். கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு சுமார் 7 படங்களில் மட்டுமே அவர் நடித்துள்ளார். தமிழில் பார்த்திபன் நடித்த புள்ள குட்டிக்காரன் மற்றும் பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா ஆகிய 2 படங்களில் சீனிவாசன் நடித்திருக்கிறார். அவர் மலையாளம் தமிழ் தவிர வேறு மொழி படங்களில் நடித்ததில்லை.

மறைந்த நடிகர் சீனிவாசனுக்கு விமலா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். அவர்களும் மலையாள சினிமாவுலகில் டைரக்சன் நடிப்புத் துறையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மறைந்த மலையாள நடிகர் சீனிவாசன் மறைவு செய்து குறித்து ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மலையாள நடிகர் சீனிவாசன் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் அவர் எனது கிளாஸ்மேட். அருமையான நடிகர். நல்ல மனிதர். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்று ரஜினிகாந்த் அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்