தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடிக் குழு படத்தில் 50 பரோட்டா சாப்பிடும் ஒரு ஜாலியான காமெடி காட்சியில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த படம் தான் அவருக்கு மிகப்பெரிய அடையாளமாக தமிழ் சினிமாவில் மாறியது. அதனால் அவருக்கு பரோட்டா சூரி என்றுதான் ஆரம்பத்தில் பல படங்களில் டைட்டில் கார்டில் இருந்தது.
அதன் பிறகு தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் காமெடி ரோலில் நடித்த நடிகர் சூரிக்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் ரசிகர்களிடம் கிடைத்தது. குறிப்பாக சிவகார்த்திகேயன் சூரி காம்பினேஷனில் பல படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றன. குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் சீமராஜா போன்ற படங்களில் சிவகார்த்திகேயன் சூரி காமெடி கூட்டணி பெரிய வரவேற்பை பெற்றது.
அது மட்டுமின்றி ரஜினிகாந்த் விஜய் அஜீத்குமார் சூர்யா ரவி மோகன் தனுஷ் கார்த்தி விஜய் சேதுபதி சசிக்குமார் என பல முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் காமெடி ரோலில் நடித்து முன்னணி காமெடி நடிகராக சூரி மாறினார். இந்த சூழலில் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூரியை விடுதலை படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். இதில் கான்ஸ்டபிள் குமரேசன் கேரக்டரில் பெரிய வரவேற்பை பெற்ற நடிகர் சூரி தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார்.
விடுதலை படத்தை தொடர்ந்து கருடன் விடுதலை 2 கொட்டுக்காளி மாமன் ஆகிய படங்களில் நடித்த நடிகர் சூரி இப்போது மண்டாடி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் முடிவடைய உள்ளது. இதைத்தொடர்ந்து அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இளம் நடிகை மமீதா பைஜூவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் வந்த வெள்ளத்தை பின்னணியாக கொண்டு இந்த படத்தின் கதையை ரவிக்குமார் உருவாக்கியுள்ளார். இதில் நடிகர் சூரி உடன் நடிக்கும் இதர நடிகர் தேர்வு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் முன்பே இந்த ஓடிடி உரிமை விற்றுள்ளது. அதனால் இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் முன் வந்துள்ளது. மண்டாடி படப்பிடிப்பு முடிந்தவுடன் அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தனது 7வது படத்தில் சூரி ஹீரோவாக நடிக்கிறார். இளம் நடிகை மமீதா பைஜூ சூரிக்கு ஜோடியாக நடிப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





