- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூரி நடித்த மண்டாடி படம் ஓடிடியில் ரிலீஸ் - எந்த தளம் எந்த தேதின்னு...

நடிகர் சூரி நடித்த மண்டாடி படம் ஓடிடியில் ரிலீஸ் – எந்த தளம் எந்த தேதின்னு கூட அறிவிச்சுட்டாங்க!

- Advertisement -

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவங்கியவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் காமெடி செய்து அவர் பிரபலமானதால் சில காலம் அவரை பரோட்டா சூரி என்றே ரசிகர்கள் அழைத்தனர். சில படங்களில் டைட்டில் கார்டில் கூட பரோட்டா சூரி என்றே பெயர் இருந்தது.

அதன்பிறகு முன்னணி நட்சத்திர ஹீரோக்களின் படங்களில் காமெடி ரோல் செய்த நடிகர் சூரியை விடுதலை படம் மூலம் கதையின் நாயகனாக இயக்குனர் வெற்றிமாறன் அறிமுகம் செய்தார். கான்ஸ்டபிள் குமரேசன் கேரக்டரில் அவரது நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை கவனத்தை பெற்றது.

- Advertisement -

தொடர்ந்து நடிகர் சூரி நடித்த கருடன் படமும் வெற்றி பெற்றது. அடுத்து சூரி நடித்த கொட்டுக்காளி படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெறாத நிலையில் நடிகர் சூரி நாயகனாக நடித்த மாமன் படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் ரூ. 40 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.

இந்த நிலையில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிகை மஹிமா நம்பியார் மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படம் மண்டாடி. கடந்த மாதம் வெளியான இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை வெற்றியை பெற்றது. இந்த படம் இதுவரை 150 கோடி ரூபாய் வரை வசூலை கடந்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறிய நடிகர் சூரி, அவர் நடித்த 6வது படத்திலேயே மிகப்பெரிய வசூலை குவித்த நிலையில் அவரது சம்பளமும் ரூ. 35 கோடியாக உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் சூரி நடிக்கிறார்.

இந்த நிலையில் மண்டாடி படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற 8ம் தேதி மண்டாடி படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்