- Advertisement -
Homeபொழுதுபோக்குதம்மாத்தூண்டு ரோலுக்கு இவ்வளவு பில்டப்பா?. வாங்க போருக்கு போவோம்.. லோகேஷ் கனகராஜிடம் அலப்பறையை கூட்டிய மன்சூர்...

தம்மாத்தூண்டு ரோலுக்கு இவ்வளவு பில்டப்பா?. வாங்க போருக்கு போவோம்.. லோகேஷ் கனகராஜிடம் அலப்பறையை கூட்டிய மன்சூர் அலிகான்

- Advertisement -

கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் திரையுலகத்தில் அடியெடுத்து வைத்தவர் மன்சூர் அலிகான். முதல் படத்திலேயே தனது வித்தியாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். அதனையடுத்து கிடைத்த வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக்கொண்டு 90களில் பிரபலமான வில்லனாக வலம் வந்தார். அதன் பிறகு சினிமா வாய்ப்பு குறைந்தாலும் அரசியல், யூ ட்யூப் பேட்டி என தன்னை பிஸியாகவே வைத்துக்கொண்டார்.

லோகேஷ் கனகராஜ்கூட மன்சூர் அலிகானின் ரசிகர்தான். கைதி படத்தை மன்சூரை மனதில் வைத்துதான் லோகேஷ் கனகராஜ் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மன்சூர் அலிகானை தான் ரொம்பவே ரசிப்பேன் என்று தொடர்ந்து மேடையில் கூறி வந்த அவர் லியோ படத்தில் மன்சூருக்கு முக்கியமான ரோலை கொடுத்திருந்தார். இருந்தாலும் பெரிதாக அவரது கவரவில்லை என்பதே ரசிகர்களில் பெரும்பாலானோரின் கருத்தாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கிடையே மன்சூர் அலிகான் சரக்கு என்ற படத்தை தயாரித்து நடித்திருக்கிறார். சமீபத்தில்கூட சென்சார் போர்டு உறுப்பினர்கள் சரக்கு படத்தை பார்த்தபோது அதிக கட்டுகள் கூறியதாக செய்தியாளர்களிடம் கோபத்துடன் பேசியிருந்தார் மன்சூர் அலிகான். இந்நிலையில் அவர் லோகேஷ் கனகராஜுக்கு சமூக வலைதளம் மூலம் சில கோரிக்கைகளை வைத்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “லட்சம் பேருக்கு வேலையை கொடுத்து 500 கோடி ரூபாயை முதலீடு செய்து ஒன்றரை வருடங்கள் மெனக்கெட்டு 1000 கோடி ரூபாய் வசூலுக்கு பாடுபடுகிறோம். ஆனால் ஒரு கையெழுத்து போட்டு 10,000 கோடியோ 20,000 கோடியோ அரசியல்வாதி ஆட்டைய போட்டுடுறான். என்னை வைத்து நீங்கள் அதுமாதிரி ஒரு அரசியல் படம் எடுங்கள் லோகேஷ் கனகராஜ். அதை விட்டுவிட்டு தம்மாத்தூண்டு ரோலுகு அம்மாம் பெரிய பில்டப்பு.

- Advertisement -

இல்லைனா வாங்க பாலஸ்தீனத்துக்கு போயி விடுதலை வாங்கிக்கொடுப்போம். 500 மிலிட்டரி டேங்கர்கள், 500 armed air craft எடுத்துட்டு வாங்க. போருக்கு போயி எல்லா ராணுவ தளங்களையும் அழிச்சிட்டு வருவோம். அப்பாவிங்க சாகுறாங்க. சும்மா டப்பி துப்பாக்கி அட்டக்கத்தியை கையில் குடுத்துக்குட்டு சும்மா.. வாங்க லோகேஷ் போருக்கு போவோம்” என குறிப்பிட்டிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்