கடந்த 2025ம் ஆண்டை பொருத்த வரை தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் திரையுலகினரை மட்டுமின்றி ரசிகர்களையும் பலத்த ஏமாற்றத்தில் தள்ளிய ஒரு ஆண்டாக தான் இருந்தது. 280க்கும் மேற்பட்ட படங்கள் வெளியான நிலையிலும் தமிழில் ரூ. 500 கோடி வசூலித்த ஒரே படம் கூலி மட்டும்தான். அது விமர்சன ரீதியாக மோசமான தோல்வியை சந்தித்தது.
அடுத்தபடியாக விஜய் நடித்த படம் எதுவும் இந்த ஆண்டில் வெளியாகவில்லை. அதே நேரத்தில் தக்லைஃப் குட்பேட் அக்லி விடாமுயற்சி ரெட்ரோ இட்லி கடை குபேரா கேங்ஸ்டர் ரெட்ட தல போன்ற படங்களும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகின. இந்த படங்களும் பெரிய அளவில் வணிக ரீீதியாக விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை.
கடந்த ஆண்டை பொருத்த வரை மதகஜ ராஜா அரண்மனை 4 தலைவன் தலைவி குடும்பஸ்தன் டிராகன் டியூட் டூரிஸ்ட் ஃபேமிலி 3 பிஎச்கே மாமன் கடைசியாக வெளிவந்த சிறை போன்ற படங்கள் மட்டுமே ரசிகர்களின் நினைவில் நின்ற நல்ல வெற்றியை பெற்ற படங்களாக இருந்தன. மற்றபடி பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாமே ஆரவாரமான ஆர்ப்பாட்டங்களாக மட்டுமே இருந்தன.
இந்த ஆண்டில் பெரிய ஹீரோக்கள் நடித்த பல முக்கிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் பல படங்கள் கடந்த 2025ம் ஆண்டில் உருவான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 விஜய் நடித்த ஜனநாயகன் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி சூர்யா நடித்த கருப்பு நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் 2 ஆகிய படங்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகின்றன.
அதே போல் கார்த்தி நடித்த சர்தார் 2 மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் அரசன்விஷால் நடித்த மகுடம் ரவி மோகன் நடித்த ஜீனி மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் காஞ்சனா4 பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ஆகிய படங்களும் முக்கிய நட்சத்திர படங்களின் வரிசையில் உள்ளன.
இந்த ஆண்டில் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வந்தாலும் அதுவே அவரது கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது பகவந்த் கேசரி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் என்பதால் ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றம் காணப்படுகிறது. எனினும் விஜய்க்கு இதுபோன்ற ரீமேக் படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக இருந்திருக்கின்றன. இதில் எந்த படம் தமிழில் ரூ. 1000 கோடி வசூலிக்கும் முதல் படம் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.





