- Advertisement -
Homeபொழுதுபோக்குசாராயத்தை குடித்தது மாதிரி ஆடாதீர்கள்... ரசிகர்களை கண்டித்த மாரி செல்வராஜ்... காரணம் இதுதான்...

சாராயத்தை குடித்தது மாதிரி ஆடாதீர்கள்… ரசிகர்களை கண்டித்த மாரி செல்வராஜ்… காரணம் இதுதான்…

- Advertisement -

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது பைசன் திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. துருவ் விக்ரம், இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக வருகிறார். இருப்பினும் அவருக்கு படத்தில் வேலை என்பது குறைவுதான். தனக்கு கொடுத்த காட்சிகளை மிகவும் கச்சிதமாக நடித்து கவனத்தை ஈர்க்கிறார்.

மற்றபடி படத்திற்கு தூணாக இருப்பது பசுபதி தான். தந்தை கதாபாத்திரத்தில் வரும் அவர் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டி இருக்கிறார். தான் பேசும் வசனங்களிலும் சரி அந்த உடல் மொழியிலும் சரி, அந்த கதாபாத்திரமாகவே அவர் வாழ்ந்திருக்கிறார் என்று கூறலாம். தனது மகன் வன்முறையில் இறங்கி விடுவானோ என்ற பதற்றத்தை படத்தின் முழுவதும் அவர் காட்டி இருந்தார்.

- Advertisement -

இதுபோக அமீர் மற்றும் லால் என இருவரும் தங்கள் பங்களிப்பை சரியாக கொடுத்திருந்தனர். கதாபாத்திரங்களை தாண்டி மாரி செல்வராஜின் திரைக்கதையும் ரசிகர்களை கட்டி போட்டு இருக்கிறது. தென் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, அதில் ஹீரோ தனது லட்சியமான கபடி விளையாட்டில் முன்னேற எப்படி போராடுகிறான் என்பதையும் சூப்பராக கூறி இருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

கபடி விளையாட்டை முன்னிலைப்படுத்தி, அது தொடர்பான கதாபாத்திரங்களின் காட்சிகளும், வன்முறை நிறைந்த சம்பவங்களும் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன. அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் விதமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அதன் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக படக்குழுவினர் சென்று வருகின்றனர்.

- Advertisement -

அதன்படி திருநெல்வேலிக்கு இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் துருவ் விக்ரம், நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் சென்றனர். அங்குள்ள திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்தபோது, மாரி செல்வராஜ் அவர்களிடம் பேசினார். நீங்கள் எனக்கு சகோதரர் மாதிரி. யாரையும் எதிராளியாக நினைக்காதீர்கள் என்று கூறினார்.

அப்போது ரசிகர்கள் அங்கு பயங்கரமாக கூச்சலிட்டனர். இதனால் கோபமடைந்த மாரி செல்வராஜ், உங்களுக்கு நான் சாராயத்தை கொடுக்கவில்லை. சினிமா மூலம் புத்தகத்தை கொடுத்திருக்கிறேன். சாராயம் குடித்த மாதிரி ஆடாதீர்கள் என்று கூறினார். அவரின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பலரும் அவரது பேச்சுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்