- Advertisement -
ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்து 2017ம் ஆண்டு வெளியான படம் மீசைய முறுக்கு. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் ஆதி கதாநாயகனாக நடித்து வருகிறார். நடிகை குஷ்புவின் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் மீசைய முறுக்கு படத்தின் தொடர்ச்சியாக மீசைய முறுக்கு 2 படத்தை ஆதி இயக்கி அவரே ஹீரோவாக நடித்து இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. எனினும் ஜென்ஸி ரசிகர்களின் அமோக ஆதரவால் இந்த படம் 51 கோடி ரூபாய்க்கு மேல் அதிகமான வசூலை ஈட்டியது. இந்த நிலையில் மீசைய முறுக்கு 2 படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் 23ம் தேதி வெளியாக உள்ளது.





