- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் வீட்டுக்குள் வைக்கப்பட்ட பணப்பெட்டி, ஆனா இந்த முறை டிவிஸ்ட்டே வேற மாதிரி இருக்கே? -...

பிக்பாஸ் வீட்டுக்குள் வைக்கப்பட்ட பணப்பெட்டி, ஆனா இந்த முறை டிவிஸ்ட்டே வேற மாதிரி இருக்கே? – புதிய விதிமுறை கொண்டு வந்த பிக்பாஸ்!

- Advertisement -

கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது. இன்று 100 நாட்கள் ஆன நிலையில், வரும் 19ம் தேதியில் டைட்டில் வின்னர் அறிவிக்கப்பட இருக்கிறார். இப்போது இறுதி போட்டியாளர்களாக சௌந்தர்யா ரயான் முத்துக்குமரன் விஷால் பவித்ரா ஜாக்குலின் ஆகிய 6 பேர் வீட்டுக்குள் உள்ளனர். அவர்களுடன் பழைய போட்டியாளர்களும் உள்ளனர்.

கடந்த சனி ஞாயிறு தினத்தில் அருண் பிரசாத் மற்றும் தீபக் வெளியேறி விட்டனர். இப்போது உள்ள 6 பேரில் இறுதி போட்டியாளர்களில் சௌந்தர்யா அல்லது முத்துக்குமரன் இருவரில் ஒருவருக்குதான் டைட்டில் வின்னர் பட்டம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிலும் சௌந்தர்யாதான் முன்னிலையில் உள்ளார்.

- Advertisement -

இந்த சூழலில் இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் பணப்பெட்டி வைக்கப்பட உள்ளது. வழக்கமாக இந்த பணப்பெட்டியில் ஒரு லட்சம் வரை ஆரம்ப தொகையாக வைக்கப்பட்டு நேரம் கடக்க கடக்க தொகை அதிகரிக்கப்படும். 5 லட்சம் 6 லட்சம் 8 லட்சம் 10 லட்சம் 12 லட்சம் 15 லட்சம் என தொகை தொடர்ந்து உயரும். இதில் விருப்பமான போட்டியாளர் அந்த பணப்பெட்டியை எடுத்துவிட்டு வெளியேறி விடலாம்.

கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் 7 சீசன்களிலும் இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால் இந்த முறை பணப்பெட்டி வைக்கப்பட்டாலும், பணப் பெட்டியை எடுக்கும் போட்டியாளர் தொடர்ந்து போட்டியில் பங்கேற்று விளையாடலாம். ஆனால் இதுவரை பணப்பெட்டியை எடுத்தவர், போட்டியில் இருந்து வெளியேறி விடுவதே விதிமுறையாக இருந்துள்ளது. மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வர முடியாது.

- Advertisement -

ஆனால் இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் பணப்பெட்டி வைக்கப்படுகிறது. வழக்கம் போல பெட்டியின் தொகை சில லட்சங்களாக அதிகரிக்கப்படும். வீட்டுக்குள் உள்ள 6 போட்டியாளர்களில் அவ்வாறு பணப்பெட்டியை எடுக்க விரும்புவோர், வீட்டுக்குள் வெளியே பணப்பெட்டி இருக்கும் தூரத்தை சரியாக கணித்துச் சொல்ல வேண்டும்.

அவ்வாறு சொல்லிவிட்டு பணப்பெட்டியை எடுப்பவர்கள், குறிப்பிட்ட நேரத்துக்குள் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துவிட வேண்டும். அப்படி வந்துவிட்டால், மீண்டும் அவர்கள் போட்டியாளராக வீட்டுக்குள் தொடரலாம். ஆனால் பிக்பாஸ் தரும் நேரத்துக்குள் வர முடியாவிட்டால் அவர் வீட்டை விட்டு வெளியேறி விட வேண்டும் என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இது பார்வையாளர்கள் மத்தியில் சுவாரசியத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்