கிட்டத்தட்ட வலிமை திரைப்படத்திற்கும் இப்படித்தான் ஆகியது. கொரோனா காலத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பிக்க, பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. குறிப்பாக படப்பிடிப்பிற்கு பாதி நாள்கள் தடை போடப்பட்டது.
படத்திற்கு வலிமை என டைட்டில் வைக்கப்பட்டதோடு சரி அதன் பிறகு ஒரு அப்டேட்டும் வெளியாகாததால் ரசிகர்கள் அதிருப்தி அடைய ஆரம்பித்தனர். இணையதளங்களில் மட்டுமல்லாது, செல்லும் இடங்களில் எல்லாம் வலிமை அப்டேட்டை அவர்கள் கேட்க ஆரம்பித்தனர். கிரிக்கெட் மைதானத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் வரைக்கும் இந்த விவகாரம் சென்றது.
இப்படி ரசிகர்கள் ஒருபுறம் கூவிக்கொண்டிருந்தாலும் அது படக்குழுவின் காதுகளுக்கு மட்டும் கேட்கவே இல்லை. இப்படி பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி வலிமை திரைப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக படத்தில் இரண்டாம் பாதியில் சுத்தமாக எடுபடாததால், அதற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
கொரோனா காலகட்டங்களில் ஏற்பட்ட பிரச்சனையால் கதையை மாற்ற வேண்டிய சூழல் உருவானது. இதன் காரணமாகவே வலிமை திரைப்படம் மக்களிடம் எடுபடவில்லை என்று கூறப்பட்டது. இப்போது இதே நிலைமை தான், விடாமுயற்சி திரைப்படத்திற்கும் வந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இதன் சூட்டிங் தொடங்கியது.
ஆனால் இப்போது வரை அந்த படம் குறித்த அப்டேட்டை, விடாமுயற்சியை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் வெளியிடவில்லை. இதன் காரணமாக ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதன் சூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெறுகிறது என்றும், இதில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ் நடிக்கிறார்கள் என்பதும் சமூக வலைதளத்தை பார்த்து மக்கள் தெரிந்து கொண்டார்கள்.
இந்த நிலையில் தற்போது தடைப்பட்டிருக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட இருக்கிறது. எண்ணி 35 நாட்கள் தான் இன்னும் சூட்டிங் உள்ளதாம். அதில் ஒரு மிகப்பெரிய சண்டைக் காட்சியை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். பிறகு புனேவிலும் சூட்டிங் நடைபெற உள்ளதாம். இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளார்கள்.





