- Advertisement -
Homeபொழுதுபோக்குஅது மட்டும் தெரிந்துவிட்டால் நான் இசையமைப்பதையே நிறுத்தி விடுவேன் - டீசர் வெளியீட்டு விழாவில் இசைஞானி...

அது மட்டும் தெரிந்துவிட்டால் நான் இசையமைப்பதையே நிறுத்தி விடுவேன் – டீசர் வெளியீட்டு விழாவில் இசைஞானி இளையராஜா ஆவேசம்!

- Advertisement -

சமீபத்தில் சஷ்டி பூர்த்தி என்ற படத்தின் டீசர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் இசைஞானி இளையராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ராஜேந்திர பிரசாத், அர்ச்சனா பிரதான கேரக்டர்களில் நடித்துள்ள இந்த படத்தை பவன் பிரபு என்பவர் டைரக்ட் செய்து இருக்கிறார்.

இந்த படத்தில் ரூபேஷ் என்பவர் கதாநாயகனாக நடித்து இந்த படத்தை அவரை சொந்தமாகவும் தயாரித்துள்ளார். சஷ்டி பூர்த்தி படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் இருந்து ஏற்கனவே சில பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சஷ்டி பூர்த்தி படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இசைஞானி இளையராஜா படத்தின் டீசரை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது, எனக்கு இசை தெரியும் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை. ஆனால் இசைக்கு தான் என்னை தெரியும் என நினைக்கிறேன்.

உண்மையில் எனக்கு பாடல் எப்படி வரும் என்பதை தெரியாது. அது தெரிந்தால் அந்த நொடியிலேயே நான் இசையமைப்பதை நிறுத்தி விடுவேன். நீங்கள் ஏற்கனவே இந்த படத்தின் சில பாடல்களை கேட்டு இருக்கிறீர்கள். இன்னும் சில பாடல்களை கேட்கப் போகிறீர்கள். அவற்றை மீண்டும் எப்போதும் கேட்டுக் கொண்டே இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

- Advertisement -

இந்த படத்திற்காக கீரவாணி எனக்கு ஒரு பாடலை எழுதி அனுப்பி வைத்தார். அவருக்கு என்னோடு இருக்கும் ஆத்ம பந்தத்தை பற்றி அந்த பாடலில் எழுதியிருக்கிறார் என்று எனக்குப் புரிந்தது. என் மீது அவருக்கு இருக்கும் தூய்மையான அன்பை அந்த பாடலில் அவர் காட்டியிருக்கிறார்.

இந்த படக் குழுவினருக்கு என்னுடைய ஆசீர்வாதங்கள். புதியவர்கள் செய்யும் எந்த முயற்சியையும் ஊக்குவிக்க வேண்டும் என்று நான் இங்கு வந்து இருக்கிறேன். அப்படி புதிதாக வருபவர்களை ஊக்குவிப்பது தான் எனது சுபாவம் என்று இசைஞானி இளையராஜா அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்