இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமாவில் மிக வித்யாசமான ஒரு இயக்குனர். அவரது படங்கள் எல்லாமே வேற லெவலில், வித்யாசமாக இருக்கும். ஆனால் அவரது சிந்தனையில் பல நல்ல படங்களை, ரசிகர்களுக்கு தனது படைப்புகளாக்கி தந்திருக்கிறார். அதனால் இயக்குனர் மிஷ்கினுக்கு என்று தனியாக ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மிஷ்கின் அடுத்து அஞ்சாதே என்ற படத்தை இயக்கினார். முகமூடி, பிசாசு, நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார்.
இயக்குனராக மட்டுமின்றி சினிமா தயாரிப்பாளராகவும் இருக்கும் மிஷ்கின் டெவில் படத்துக்கு இசையமைத்துள்ளார். சவரக்கத்தி, மாவீரன், லியோ, நந்தலாலா போன்ற சில படங்களில் நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். துப்பறிவாளன் மிஷ்கின் இயக்கிய படங்களில் மிக முக்கியமான படமாக ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இப்போது விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் ட்ரெயின் என்ற படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார். சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங், சென்னை பூந்தமல்லியில் கிரீன்மேட் செட் போட்டு எடுக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் – சென்னை ரயிலில் நடக்கும் ரயில் பயண சம்பவங்களை அடிப்படையாக கொண்ட விறுவிறுப்பான கதை என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து பூந்தமல்லியில் இதே இடத்தில் ரயில்வே பிளாட்பாரம் செட் அமைத்து, படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் சில தினங்களுக்கு ஒருமுறை டைரக்டர் மிஷ்கினுக்கு கொரியரில் புத்தகங்கள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கிறது. தீவிர வாசிப்பு பழக்கம் உள்ள டைரக்டர் மிஷ்கின் இப்படி புத்தங்களை கொரியர் மூலம் படப்பிடிப்பு தளத்துக்கே வரவழைத்து விடுகிறார்.
படத்தின் டைரக்டர் மிஷ்கின், படப்பிடிப்பு தளத்தில் ஷூட்டிங்கில் முழுமையான கவனம் செலுத்தாமல் இப்படி அடிக்கடி புத்தகங்களை கொரியரில் வரவழைத்து மணிக்கணக்கில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். இதனால் ஷூட்டிங் வேகம் குறைகிறது. படப்பிடிப்பில் தாமதமாக அதிக வாய்ப்புள்ளது. இது படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கு தெரிந்தால் பெரிய சிக்கலாகி விடுமே என, படப்பிடிப்புக் குழுவினர் திக் திக் என்ற மனநிலையில், தினமும் படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.





