- Advertisement -
தமிழ் சினிமாவில் 46 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி கமல் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா படம் குறித்த எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. ஏனெனில் ஜெயிலர் ஜெயிலர் 2 படங்களின் மாபெரும் வெற்றி நெல்சன் மீதான ஆர்வத்தை பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் ரஜினி கமல் இருவரில் யார் ஹீரோ? யார் வில்லன்? அல்லது இருவருமே ஹீரோக்களாக நடித்து வேறு ஒரு பெரிய நடிகர் வில்லனாக களம் இறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.





