தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் நித்யா மேனன். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். தமிழில் மிகக் குறைந்த திரைப்படங்களிலேயே அவர் நடித்திருந்தாலும் அந்த திரைப்படத்தில் அவரது பங்கு என்பது பெரிய அளவில் இருக்கும்.
இதில் உதாரணமாக நாம் மெர்சல் திரைப்படத்தைக் கூறலாம். அதில், பிளாஷ்பேக் காட்சியில் மிகக் குறைந்த சீன்களிலேயே நித்யா மேனன் வருவார். இருப்பினும் அதில் சிறப்பான பங்கு அளித்திருப்பார் நித்யா மேனன். படத்தில் அவரது தாக்கம் கடைசி வரை இருந்ததாக அப்போது சினிமா விமர்சகர்கள் கூறியிருந்தனர்.
இதுபோக ஓகே கண்மணி திரைப்படத்திலும் நித்யா மேனன் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சைக்கோ திரைப்படத்திலும் நித்யா மேனன் நடிப்பு பேசப்பட்டது. கடைசியாக அவர் தனுசுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் சோபனா என்னும் கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார் நித்யா மேனன்.
படம் முழுவதும் தனுஷ் உடன் பயணம் செய்யும் அவர், பக்கத்து வீட்டு பெண் போன்ற கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்து இருப்பார். அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு நித்யா மேனனின் நடிப்பும் ஒரு காரணம் என்று கூறலாம். இந்த திரைப்படத்திற்காக தேசிய விருதையும் நித்தியா மேனன் பெற்றார். இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து தலைவன் தலைவி எனும் திரைப்படத்தில் அவர் நடித்திருக்கிறார்.
இது போக தனுஷின் இட்லி கடை திரைப்படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார் நித்யா மேனன். இந்த நிலையில் சமீபத்தில், அவர் அளித்திருக்கும் பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து உள்ளார். குறிப்பாக தலைவன் தலைவி திரைப்படத்தில் நடித்த அனுபவங்களையும் அவர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் பேசியதாவது,
இட்லி கடை திரைப்படத்திற்காக நான் வெறும் கைகளில் மாட்டுச் சாணத்தை சுத்தம் செய்தேன். நான் தேசிய விருதை பெறுவதற்கு முந்தைய நாளில் இந்த காட்சி எடுக்கப்பட்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் மறுநாள் நான் தேசிய விருதை பெறும் போது, எனது கைவிரல்களில் மாட்டுச் சாணம் ஒட்டி இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.





