- Advertisement -
Homeபொழுதுபோக்குமுடிந்துபோன விஷயத்தை மீண்டும் ஆரம்பித்து வைத்து விட்டாரா ஜோதிகா... கங்குவா குறித்து மீண்டும் விமர்சனம் இருந்ததால்...

முடிந்துபோன விஷயத்தை மீண்டும் ஆரம்பித்து வைத்து விட்டாரா ஜோதிகா… கங்குவா குறித்து மீண்டும் விமர்சனம் இருந்ததால் தொடரும் சர்ச்சை…

- Advertisement -

சூர்யா சிறுத்தை சிவா கூட்டணியில் மிகப்பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்ட திரைப்படம் கங்குவா. 300 கோடி ரூபாய் செலவில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், கடந்த 14 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

 

- Advertisement -

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த படம் வெளியிடப்பட்டது. இதற்கான ப்ரொமோஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்தினார் சூர்யா. நாட்டில் பல முக்கியமான நகரங்களில் அவர் பிரமோஷன் பணிகளில் பங்கேற்றார்.

 

- Advertisement -

இப்படியான சூழலில், படம் எதிர்பார்த்த விமர்சனத்தை பெறவில்லை. பல காட்சிகள் விசுவல் ட்ரீட்டாக இருந்தாலும், திரைக்கதை அந்த அளவு ஸ்ட்ராங்காக இல்லை என்று பலரும் கூறி வருகிறார்கள். சிறுத்தை சிவா தனது பணியை ஒழுங்காக செய்யவில்லை என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இது மட்டுமல்லாமல் படம் கேலி கிண்டலுக்கும் ஆளாகி உள்ளது. படம் ரிலீஸ் ஆன இரண்டு நாட்களாக அது குறித்த விமர்சனங்கள் எழுந்து வந்தன. இப்படியான சூழலில், கங்குவா திரைப்படம் குறித்த விமர்சனங்களுக்கு பதில் கொடுத்திருக்கிறார் நடிகை ஜோதிகா. இது குறித்து பேசி இருக்கும் அவர்,

 

மற்ற திரைப்படங்களுக்கு வராத விமர்சனம் கங்குவா படத்திற்கு மட்டும் ஏன் வருகிறது. படத்தின் முதல் 30 நிமிடங்கள் நன்றாக இல்லை. சத்தம் இரைச்சலாக இருப்பது என்பதை ஒத்துக் கொள்கிறேன். மூன்று மணி நேரத்தில் அரை மணி நேரம் மட்டும் குறை உள்ளது. ஆனால் இது முழுமையான சினிமா அனுபவத்தை கொடுக்கும் திரைப்படம்.

 

ஒரு நடிகராக சினிமாவை முன்னுக்கு கொண்டு வரவேண்டும் என்று நினைக்கும் உங்களை பார்த்து பெருமைப்படுகிறேன் சூர்யா என்று ஜோதிகா பேசியிருக்கிறார். இப்படியான சூழலில் ஜோதிகாவின் கருத்தையும் சேர்த்து இணையதள வாசிகள் தற்போது வறுத்தெடுத்து வருகிறார்கள். ஏற்கனவே கண்டன்ட் நயன்தாரா தனுஷ் பக்கம் திரும்பி இருக்கும் வேளையில் மீண்டும் இவர் ஏன் கங்குவா பக்கம் வருகிறார் என்றும் அவர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

 

- Advertisement -

சற்று முன்