தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாண்டிராஜ். அவரது இயக்கத்தில் கடந்தாண்டில் வெளியான படம் தலைவன் தலைவி. விஜய் சேதுபதி நித்யாமேனன் நடித்த இந்த படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்த பிளாக்பஸ்டர் படமாக இருந்தது.
இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிகர் ஜெயராம் ஊர்வசி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மிஷ்கின் தமிழ் குமரன் சாண்டி யோகி பாபு சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்த படம் பரிமளா அண்ட் கோ. இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த படம் நடந்த நேற்று முன்தினம் 28ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருந்த நிலையில், நடிகர் சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்தின் அபார வெற்றி காரணமாக பரிமளா அண்ட் கோ படம் வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீஸ் என படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பரிமளா அண்ட் கோ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. வர்கீஸ் என்பவர் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையை செய்தது ஜெயராமின் குடும்பம் என போலீஸ் சந்தேகப்படுகிறது. இதில் ஜெயராம் ஊர்வசி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் அடங்கிய பரிமளா அண்ட் கோ குடும்பம்தான் கொலையாளிகள் என போலீஸ் சந்தேகிக்கிறது.
இந்த சூழலில் அந்த கொலை வழக்கில் இருந்து தப்பிப்பது எப்படி என அந்த குடும்பம் திட்டமிடுவதும் அந்த கொலையை யார் செய்தது என குடும்பத்தில் இருப்பவர்களே ஒருவர் மீது ஒருவர் சந்தேகப்படுவதும் என காமெடி கலந்த குடும்ப டிராமாவாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏற்கனவே கடைக்குட்டி சிங்கம் நம்ம வீட்டுப்பிள்ளை போன்ற குடும்ப கதை படங்களை எடுத்து பெரிய வெற்றி பெற்றவர் இயக்குனர் பாண்டிராஜ். மலையாளத்தில் 26 படங்களில் இணைந்து நடித்துள்ள ஜெயராம் ஊர்வசி காமெடி ஜோடி 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். காமெடி கலந்த க்ரைம் திரில்லர் குடும்ப கதையாக இந்த படம் ரசிகர்களிடம் அதிக கவனம் பெற்றுள்ளது.





