- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் 11ம் தேதி சென்னைக்கு வருகை தரும் பாரத பிரதமர் மோடி - இளையராஜா இசை...

வரும் 11ம் தேதி சென்னைக்கு வருகை தரும் பாரத பிரதமர் மோடி – இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்கிறார்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் தனது இசை பயணத்தில் அரை நூற்றாண்டு கடந்தவர் இசைஞானி இளையராஜா. இதுவரை 1300க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் இசையமைத்து இருக்கிறார். பல ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் தனது இசையில் உருவாக்கி இருக்கிறார். இசை உலகில் மேஸ்ட்ரோ என்ற சிறப்புக்குரியவர்.

அவர் அமைத்த வேலியண்ட் சிம்பொனி உலக அளவில் மிகச்சிறந்த சாதனையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக 1976ல் தமிழ் சினிமாவுக்குள் வந்த இளையராஜா அன்று முதல் இன்று வரை இசை உலகில் ஒரு முடிசூடா சக்ரவர்த்தியாக விளங்குகிறார்.

- Advertisement -

மேலும் தனிப்பட்ட முறையில் அவர் மீதான பலவிதமான சர்ச்சைகள் விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு இசைக்கலைஞனாக அவரது சாதனைகள் யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாதது. இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி, வரும் 11ம் தேதி இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்கும் பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

சென்னையில் பூந்தமல்லி – வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 11ம் தேதி துவக்கி வைக்கிறார். இதற்காக அவர் வருகிற 11ம் தேதி சென்னைக்கு வருகை தர இருக்கிறார். பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைக்கும் பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் போரூர் வரை பயணம் செய்கிறார்.

- Advertisement -

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக சென்னை ஐஐடி வளாகத்துக்கு வருகிறார். சென்னை ஐஐடியில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி அந்த வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் அதே வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையம் சார்பில் கடந்த 2024ம் ஆண்டு இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த மையம் தற்போது கட்டுமான பணி நிறைவடைந்ததை எடுத்து பிரதமர் மோடி வரும் 11ம் தேதி திறந்து வைக்க இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்