- Advertisement -
Homeபொழுதுபோக்குமதிய உணவு வேளையில் எம்ஜிஆரை காண வந்த பிரபல கவிஞர், சாப்பிட்ட பிறகு கோபப்பட்ட எம்ஜிஆர்...

மதிய உணவு வேளையில் எம்ஜிஆரை காண வந்த பிரபல கவிஞர், சாப்பிட்ட பிறகு கோபப்பட்ட எம்ஜிஆர் – அங்கே நடந்தது என்ன?

- Advertisement -

எம்ஜிஆர் நடித்த படங்களில் கதையம்சம் சிறப்பாக இருக்கும். அது போல படத்தில் வரும் பாடல்களும் பெரிய அளவில் ஹிட் ஆகும். எம்ஜிஆர் பாடல்கள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். கொள்கை பாடல் தத்துவ பாடல் காதல் பாடல் எதுவாக இருந்தாலும் எம்ஜிஆர் படப் பாடல்கள் எப்போதுமே ரசிக்கத்தக்கவை.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடித்த பல படங்களுக்கு அற்புதமான பாடல்களை எழுதியவர் கவிஞர் புலமைப் பித்தன். ஒருமுறை மதிய வேளையில் ஒரு பாடலை எழுதிக் கொண்டு எம்ஜிஆரைப் பார்க்க ஸ்டுடியோவுக்கு வந்திருக்கிறார்.

- Advertisement -

அப்போது வெளியே இருந்தவர்கள், சின்னவர் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என்று கூறியிருக்கின்றனர். அதற்கு கவிஞர், பரவாயில்லை. அவர் சாப்பிட்டு விட்டு வரட்டும். அதுவரை நான் வெளியே காத்திருக்கிறேன் என்று புலமைப் பித்தனும் கூறிவிட்டுக் காத்திருந்திருந்தார்.

எம்ஜிஆர் சாப்பிட்டு முடிந்த பிறகு, அவரிடம் கவிஞர் புலமைப்பித்தன் உங்களை காண்பதற்காக வெளியே காத்திருப்பதாகக் கூறியிருக்கின்றனர். உடனே அவரை உள்ளே அழைத்த எம்ஜிஆர், எப்போது வந்தீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

- Advertisement -

அதற்கு கவிஞர் புலமைப்பித்தன், நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே நான் வந்து விட்டேன், நீங்கள் சாப்பிடுவதாக கூறியதால் வெளியே காத்திருந்தேன் என்று கூற எம்ஜிஆருக்கு முகமெல்லாம் சிவந்து விட்டது. தனது உதவியாளர்களை அழைத்து கடுமையாகத் திட்டிய எம்ஜிஆர், கவிஞரிடம் வருத்தமாக பேசியிருக்கிறார்.

நாமெல்லாம் இந்த ஒரு வேளை சாப்பாட்டுக்குத்தானே உழைக்கிறோம்? உங்களை வெளியே அமர வைத்து விட்டு நான் சாப்பிட்டுக் கொண்டு இருந்திருக்கிறேனே என ஆதங்கமாக புலமைப் பித்தனிடம் திரும்பத் திரும்பக் கூறி கண்கலங்கி இருக்கிறார் எம்ஜிஆர். பரவாயில்லை அண்ணே, இது சாதாரணமான விஷயம்தானே? என கவிஞர் புலமைப்பித்தன் எம்ஜிஆரை சமாதானப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்