- Advertisement -
Homeபொழுதுபோக்குவெங்கட் பிரபு தன்னோட முதல் படத்துக்கு வெச்ச பேரு என்ன தெரியுமா? - மேடையில் உண்மையை...

வெங்கட் பிரபு தன்னோட முதல் படத்துக்கு வெச்ச பேரு என்ன தெரியுமா? – மேடையில் உண்மையை போட்டுடைந்த கவிஞர் வாலி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் வரை பல ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. ஹேராம் பார்த்தாலே பரவசம் பொய்க்கால் குதிரை சினிமா சினிமா என பல படங்களில் கவிஞர் வாலி சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் கவியரசு கண்ணதாசனுக்கு பிறகு பெரிய அளவில் கொண்டாடப்பட்டவர் கவிஞர் வாலி.

இசைஞானி இளையராஜாவின் தம்பி கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு. ஆரம்பத்தில் உன்னைச் சரணடைந்தேன் சிவகாசி ஏப்ரல் மாதத்தில் போன்ற சில படங்களில் நடித்தார். ஆனால் நடிகராக வெங்கட்பிரபு பெரிய அளவில் தமிழ் சினிமாவில் கவனம் பெற முடியவில்லை. இதையடுத்து அவர் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

அவர் இயக்கிய முதல் படம் சென்னை 28 மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. தொடர்ந்து கோவா சரோஜா மாசு என்கிற மாசிலாமணி சென்னை 28 படம் 2ம் பாகம் மங்காத்தா மாநாடு தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக மாறி இருக்கிறார். அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை வெங்கட்பிரபு டைரக்ட் செய்ய உள்ளார்.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் நடந்த விழாவில் ஒன்றில் பங்கேற்ற கவிஞர் வாலி கூறியதாவது, வெங்கட்பிரபு டைரக்டர் ஆன பிறகு முதலில் என்னிடம்தான் வந்தார். படத்துக்கு என்னய்யா பேரு என்றேன். எங்க ஏரியா உள்ள வராதே என்றார். ஒருத்தனும் வாங்க வரமாட்டான்யா படத்தை. அப்படீன்னு நான்தான் சென்னை 28 ன்னு பேரை மாத்தினேன்.

படம் சூப்பர் டூப்பர் ஹிட் படமாகி விட்டது. இப்போது வெங்கட்பிரபு ஒரு காஸ்ட்லியான டைரக்டராக மாறிவிட்டார். அவர் காஸ்ட்லியான டைரக்டர் என்று உனக்கு எப்படி ஐயா தெரியும் என்று கேட்டால், நான் கேட்கிற பயங்கரமான சம்பளத்தை அவன் கொடுக்கறான் பாருங்க. அதை வெச்சு கண்டிபிடிச்சேன் வெங்கட்பிரபு காஸ்ட்லியட் டைரக்டர் என்று.

அவர் சாதாரண டைரக்டராக இருந்தால், வாலி எல்லாம் பாட்டு எழுத 2 லட்சம் ரூபாய் கேப்பாருய்யா என்று புரடியூசர் சொல்லி வேற ஆளை வெச்சிக்கலாம் என்று என்னை தவிர்த்திருப்பார். ஆனால் டைரக்டர் வெங்கட்பிரபு சொன்னா அடுத்த நிமிஷம் என்னை தேடி புரடியூசர் கிட்ட இருந்து பணம் வருகிறது என்று ஒரு விழாவில் மறைந்த கவிஞர் வாலி பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்