- Advertisement -
சென்னையில் இன்று இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா உடல் நலக்குறைவால் 76 வயதில் காலமானார். முதல்வர் விஜய் திமுக தலைவர் ஸ்டாலின் நடிகர்கள் ரஜினிகாந்த் சத்யராஜ் உள்ளிட்ட பலர் நேரில் வந்து தேவாவின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அரசியல் தலைவர்கள், திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, தமிழ் திரை உலகின் இசையுலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்த இசையமைப்பாளர் தேவா அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது இசையும் பாடல்களும் என்றும் நம் நினைவுகளில் வாழும் என்று கூறியிருக்கிறார்.





