- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்தில் அந்த காட்சிகளும் வருகிறது, அரசியல் ஆட்டத்தில் அழகாய் காய் நகர்த்தி அசத்தும் தளபதி...

ஜனநாயகன் படத்தில் அந்த காட்சிகளும் வருகிறது, அரசியல் ஆட்டத்தில் அழகாய் காய் நகர்த்தி அசத்தும் தளபதி – உற்சாகத்தில் கட்சியினர்!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்துக்கு ஜனநாயகன் என்று டைட்டில் வைக்கப்பட்ட நிலையில், இந்த படம் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. அது மசாலா கலந்த கமர்ஷியல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ பிரியாமணி ஸ்ருதிஹாசன் கௌதம் மேனன் பாபி தியோல் பிரகாஷ் ராஜ் நரேன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

- Advertisement -

மசாலா கலந்த கமர்ஷியல் படமாக ஜனநாயகன் படம் உருவாகி வந்தாலும், அதில் பல விஷயங்களை மாற்றி, நடிகர் விஜய்க்கு ஏற்ப திரைக்கதை மற்றும் காட்சிகளில் வசனங்களில் இயக்குனர் எச் வினோத் மெருகேற்றி இருப்பதாக சொல்லப்படுகிறது.

நடிகர் விஜயகாந்த் தேமுதிக என்ற அரசியல் கட்சியை துவங்கும் முன் அவர் நடித்த ராஜ்ஜியம் என்ற படத்தில் கட்சி கொடி கட்சி மோதிரம் அரசியல் கொள்கைகளை பேசியது போல் ஜனநாயகன் படத்திலும் பல அரசியல் விஷயங்களை விஜய் பேசுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக நடிகர் விஜய் தேர்தல் வாக்குசாவடி பூத் சிலிப் குறித்து இந்த படத்தில் சில காட்சிகளில் நடித்திருக்கிறார். அவருடன் நடிகர் விடிவி கணேஷூம் இணைந்து நடித்திருக்கிறார். விஜயுடன் பீஸ்ட் வாரிசு தி கோட் படங்களில் விடிவி கணேஷ் நடித்த நிலையில் ஜனநாயகன் படத்திலும் பல காட்சிகளில் அவர் விஜயுடன் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த தவெக கட்சியின் 2ம் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், பூத் சிலிப் குறித்த ஒரு தனிமாநாடே நடத்தப்படும் என்று கூறியிருந்த நிலையில், ஜனநாயகன் படத்தில் பூத்சிலிப் சார்ந்த சில காட்சிகள் வருவதாகவும் அதில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல விஷயங்களை விஜய் பேசியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்