- Advertisement -
Homeபொழுதுபோக்குவிக்ரம் விஜய் படங்களில் வில்லனாக மிரட்டிய பிரபல தெலுங்கு நடிகர் கோட்டா சீனிவாசராவ் மறைவு -...

விக்ரம் விஜய் படங்களில் வில்லனாக மிரட்டிய பிரபல தெலுங்கு நடிகர் கோட்டா சீனிவாசராவ் மறைவு – நடிகர் சிரஞ்சீவி இயக்குனர் ராஜமௌலி உள்ளிட்டோர் அஞ்சலி!

- Advertisement -

ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடிக்கும் ஹீரோவின் பெருமையை தூக்கிப் பிடிப்பதே அந்த படத்தின் வில்லன் கேரக்டர்தான். பாட்ஷா படத்தில் நடித்த ரகுவரன்தான், ரஜினியின் ஹீரோயிசத்தை தூக்கிப் பிடித்தார். தேவர்மகன் படத்தில் கமல்ஹாசனின் ஹீரோயிசத்தை ஜெயிக்க நாசரின் கொடூர வில்லத்தனம் காரணமாக இருந்தது.

எம்ஜிஆரை பெரிய ஹீரோயிசம் காட்ட வைத்தவர் எம்என் நம்பியார்தான். கில்லி படம் ஜெயிக்க முத்துப்பாண்டியாக வந்த பிரகாஷ்ராஜ்தான் முக்கிய காரணம். நாயகனுக்கு கடும் சவாலாக இருக்கும் வில்லன்தான், அந்த ஹீரோ தனது திறமையை பெருமையை வெளிப்படுத்த காரணமாக இருக்கிறார். அதுதான் ரசிகர்களிடம் ஹீரோவாக கொண்டாட வைக்கிறது. அப்படி ஒரு வில்லத்தனம் கொண்டவர்தான் தெலுங்கு நடிகர் கோட்டா சீனிவாசராவ்.

இயக்குனர் ஹரி இயக்கிய சாமி படத்தில் போலீஸ் அதிகாரி விக்ரம் நடித்திருந்தார். அதில் பிச்சை பெருமாள் கேரக்டரில் கிங் மேக்கர் அரசியல்வாதியாக கோட்டா சீனிவாசனின் வில்லன் நடிப்பை ரசிகர்களால் மறக்க முடியாது. அதே போல் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் சனியன் சகடை என்ற கேரக்டரில் கோட்டா சீனிவாசன் அதகளம் செய்திருப்பார்.

வில்லனாக மட்டுமின்றி கார்த்தி, சந்தானம் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில், சொக்கத்தங்கம் ஜூவல்லரி உரிமையாளராக பெண் வேடமிட்ட சந்தானம் கரினா சோப்ரா மீது ஆசை கொண்ட கேரக்டரில் கோட்டா சீனிவாசராவ் நடிப்பு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்கவும் வைத்தது. மிக நல்ல நடிகராக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற கோட்டா சீனிவாசராவ் காலமாகி விட்டார்.

குத்து ஏய் பரமசிவம் ஜோர் என தமிழில் பல படங்களில் நடித்த நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தமிழ் தெலுங்கு என 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 6 முறை நந்தி விருதுகளை பெற்றவர். 1999 – 2004ம் ஆண்டுகளில் விஜயவாடா கிழக்கு தொகுதியில் எம்எல்ஏ வாக இருந்தவர். சமீபகாலமாக உடல் நலம் பாதி்ககப்பட்டிருந்த அவர், தனது 83வது வயதில் ஐதராபாத்தில் காலமானார்.

வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் மறைக்கு தெலுங்கு மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, அவரது தம்பியும் ஆந்திரா துணை முதல்வருமான நடிகர் பவன் கல்யாண், இயக்குனர்கள் எஸ்எஸ் ராஜமௌலி, ராம்கோபால் வர்மா நடிகர் ஜூனியர் என்டிஆர் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். காமெடி வில்லன் என எந்த கேரக்டரிலும் நடிப்பில் ஜொலிக்கும் ஒரு ஒப்பற்ற கலைஞரை இழந்து விட்டோம் என்று பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சற்று முன்