- Advertisement -
Homeபொழுதுபோக்கு2 ஆண்டுகளாக காத்திருந்து பல்பு வாங்கிய இயக்குனர் வெங்கட்பிரபு - கடைசியில் நடந்த பஞ்சாயத்து, மங்காத்தா...

2 ஆண்டுகளாக காத்திருந்து பல்பு வாங்கிய இயக்குனர் வெங்கட்பிரபு – கடைசியில் நடந்த பஞ்சாயத்து, மங்காத்தா 2 உருவாகிறதா?

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்டைம் படத்தை இயக்கியவர் வெங்கட்பிரபு. இந்த படம் 2024ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியானது. அதன்பிறகு 2 ஆண்டுகளாக வெங்கட்பிரபு தனது அடுத்த படத்தை துவங்காமல் இன்னும் இருந்து வருகிறார். இதற்கு காரணம் நடிகர் சிவகார்த்திகேயன் தான்,

தி கோட் படத்துக்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில்தான் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் அமரன் மதராஸி பராசக்தி சேயோன் என அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்த நிலையில் வெங்கட்பிரபு அவருக்கு 2 ஆண்டுகள் வரை காத்திருந்தார்.

- Advertisement -

சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பில் சயன்ஸ்பிக்சன் கதைக்களத்தில் ஒரு பெரிய பட்ஜெட் படத்தை இயக்க வெங்கட்பிரபு கமிட் ஆகியிருந்தார். இந்த படத்தில் தான் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க இருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் வெங்கட்பிரபுவிடம், திரைக்கதை ரொம்பவும் குழப்பமாக உள்ளது. கதையில் திருத்தம் செய்யுங்கள் என்று கூறிவிட்டார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமும் அவர்களது தரப்பில் படத்துக்கான பட்ஜெட் அதிகமாக உள்ளது. தயாரிப்பு செலவுகளை குறையுங்கள் என்றும் வெங்கட்பிரபுவிடம் கூறியுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் அலுவலகத்தில் இதுகுறித்து நடந்த பஞ்சாயத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை வெங்கட்பிரபு இயக்கவில்லை என்பதும் முடிவாகி உள்ளது.

- Advertisement -

இப்படி ஒரு ஏமாற்றமான சூழலில் வெங்கட்பிரபு அடுத்தகட்ட முயற்சிகளை துவங்கியிருக்கிறார். துபாயை சேர்ந்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் நடிகர் அஜீத்குமார் நடிப்பில் மங்காத்தா 2 படத்தை இயக்க வெங்கட்பிரபு காய்களை நகர்த்தி வருகிறார். ஆனால் இதுவும் இப்போதைக்கு சாத்தியமில்லை என்றே தெரிகிறது.

ஏனென்றால் ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் சிறுத்தை சிவா படங்களில் நடிக்க அஜீத்குமார் கமிட் ஆகியிருக்கிறார். வருகிற 2027ம் ஆண்டு மார்ச் வரை அவருக்கு கார் ரேஸ் உள்ளது. மேலும் துபாய் கண்ணன் ரவி சின்ன பட்ஜெட் படங்களை தயாரிக்கும் நிலையில் ரூ. 300 கோடி வரை பட்ஜெட்டில் அஜீத்குமுார் படத்தை தயாரிப்பாரா என்பதும் கேள்வியாக உள்ளது. இப்படி பல சிக்கல்களில் வெங்கட்பிரபு அப்செட்டில் இருந்து வருகிறார்.

- Advertisement -

சற்று முன்