- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயம் மட்டும் வேண்டாம், இப்படியே ஜாலியா இருக்கலாம், டிமிக்கி கொடுத்த அந்த பிரபல நடிகர்...

அந்த விஷயம் மட்டும் வேண்டாம், இப்படியே ஜாலியா இருக்கலாம், டிமிக்கி கொடுத்த அந்த பிரபல நடிகர் – அதிரடி முடிவெடுத்த நயன்தாரா

- Advertisement -

நடிகை நயன்தாரா இப்போது லேடி சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். அவர் நடித்த அன்னபூரணி படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அடுத்து, மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் தக்லைப் படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார். ஆனால், இதுபற்றிய அதிகாரபூர்வ தகவலை, மணிரத்னம் அறிவிக்கவில்லை.

நயன்தாராவை பொருத்தவரை சினிமா நாயகி என்பதை விட சர்ச்சை நாயகி என்ற அடையாள பெயர் அவருக்கு சரியாக இருக்கும். துவக்கத்தில் மற்ற நடிகைகளை போல, சாதாரண நாயகியாக பேசப்பட்ட நயன்தாரா, ஒரு காலகட்டத்துக்கு பிறகு பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார். குறிப்பாக அவரது காதல் விவகாரங்களால் அடிக்கடி பேசப்பட்டார்.

- Advertisement -

நடிகர் சிலம்பரசனுடன் நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. குறிப்பாக வல்லவன் படத்தில் நடித்த அந்த காலகட்டத்தில் சிம்புவும், நயன்தாராவும் தரும் உதட்டு முத்தக்காட்சிகள், பத்திரிகைகளில் வெளியாகி பயங்கர டிரெண்டிங் ஆனது. அதுவும் ஓட்டல் தனியறையில், சோபா மீது அமர்ந்தபடி அவர்கள் கொடுத்துக்கொண்ட அந்த முத்தம், ஷூட்டிங்கில் எடுக்கப்பட்டது அல்ல.

ஒரு கட்டத்தில் சிம்புவுடன் காதல் முறிவு ஏற்பட்ட நிலையில், 2009, 2010 காலகட்டத்தில் நடிகர் பிரபுதேவாவுடன் நயன்தாரா காதல் வயப்பட்டார். இருவரும் சின்சியராக காதலித்தனர். திருமணம் செய்யாமல் சேர்ந்து குடும்பம் நடத்தும் முறையில் இருவரும் வாழ்ந்தனர். ஆனால், பிரபுதேவாவுடன் குடும்ப வாழ்க்கை வாழ நயன்தாரா மிகவும் விரும்பினார்.

- Advertisement -

ஏற்கனவே திருமணமாகி, 3 குழந்தைகளுக்கு தந்தையாக பிரபுதேவா அந்த காலகட்டத்தில் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வாழ்ந்து வந்தார். ஏற்கனவே மனைவியை விவாகரத்து செய்தவர் என்று தமிழ் சினிமாவில் பேசப்பட்ட நிலையில், நயன்தாராவுடன் திருமணம் செய்தால் இன்னும் தனது பெயருக்கு டேமேஜ் ஏற்படலாம் என்று கருதிய பிரபுதேவா, நயன்தாராவை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவில்லை. ஆனால் சினிமாவை விட்டு விலகி பிரபுதேவாவுடன் குடும்ப வாழ்க்கை நடத்த நயன்தாரா மிகவும் ஆசைப்பட்டு இருக்கிறார்.

திருமணம் என்கிற விஷயம் மட்டும் வேண்டாம். இப்படியே ஜாலியாக இருந்துவிடலாம் என பிரபுதேவா, நயன்தாராவிடம் கூறியிருக்கிறார். மேலும் நயன்தாரா வருமானத்தில் பெரும்பகுதியை செலவு செய்த அவர், மனைவிக்கு ஜீவனாம்சம் கூட நயன்தாரா பணத்தில் இருந்து கொடுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில், தன்னை பயன்படுத்திக்கொள்ளும் பிரபுதேவாவின் சுயநலத்தை, அவர் டிமிக்கி கொடுப்பதை உணர்ந்த நயன்தாரா, அவரது உறவை முறித்துக்கொண்டார்.

- Advertisement -

சற்று முன்