- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்போதைக்கு இதுதான் நம்ம ரூட், குறுக்க வந்து யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க - பிரபல தயாரிப்பாளருக்கே...

இப்போதைக்கு இதுதான் நம்ம ரூட், குறுக்க வந்து யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க – பிரபல தயாரிப்பாளருக்கே நோ சொன்ன பிரதீப் ரங்கநாதன்

- Advertisement -

நடிகர் பிரதீப் ரங்கநாதன், லவ்டுடே படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர். இந்த படத்தில் இவானா, சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். காதலர்களுக்கு மத்தியில் இருக்கும் பொசஸ்னிவ் உணர்வை மையப்படுத்திய கதையாக இந்த படம் அமைந்தது.

காதலர்கள் தங்களது மொபைல் போன்களை ஒரு நாள் மாற்றிக்கொள்வதன் மூலம் அவர்களது அந்தரங்க விஷயங்கள் ஒவ்வொன்றும் தெரிய வருகிறது. அந்த விஷயங்களை காமெடியாகவும் அதே வேளையில் உணர்வுரீதியான மனக் கஷ்டங்களையும் தனது திறம்பட்ட இயக்கத்தாலும், நடிப்பாலும் அசத்தியிருந்தார் பிரதீப் ரங்கநாதன்.

- Advertisement -

ரூ. 8 கோடியில் எடுக்கப்பட்ட இந்த படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. தொடர்ந்து திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. ஆனால் இந்த படத்துக்கு பிறகு பல ஆண்டுகளாக வேறு படங்களை இயக்கவோ, நடிக்கவோ பிரதீப் ரங்கநாதன் முன்வரவில்லை. ஆனால் முதலிலேயே தன்னுடைய படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்று அவரிடம் சம்மதம் வாங்கியிருந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022ல் நடிகர் அஜீத்குமார் நடிக்கும் விடாமுயற்சியை படத்தை இயக்கிய பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார் விக்னேஷ் சிவன். ஆனால் அவரை நிராகரித்துவிட்டு அந்த வாய்ப்பை டைரக்டர் மகிழ்திருமேனிக்கு வழங்கி விட்டார் அஜீத்குமார். அதன்பிறகு ஓராண்டுக்கு மேலாக வாய்ப்பின்றி இருந்த விக்னேஷ் சிவன், எல்ஐசி படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த படத்தின் படப்பிடிப்பு கோவை ஈஷா மையத்தில் துவங்கியது. தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்து 60 சதவீத படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இந்த படத்தில் நடிக்க பிரதீப் ரங்கநாதனுக்கு ரூ. 20 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. லவ்டுடே படத்துக்கு பிறகு சம்பள உயர்வுக்காக இதுவரை காத்திருந்து, எல்ஐசி படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்எஸ் லலித்குமார் தயாரிக்கிறார்.

இந்நிலையில், லவ்டுடே படத்துக்கு முன், ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து பிரதீப் ரங்கநாதன் இயக்கிய படம் கோமாளி. இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் பட நிறுவனம். அந்த நிறுவனம் பலமுறை படம் இயக்க வருமாறு அழைத்தும்., பிரதீப் ரங்கநாதன் செல்லவில்லை. ஏற்றிவிட்ட ஏணியை உதைப்பது போல, தனது முதல் படமான கோமாளி படத்தை தயாரித்த வேல்ஸ் நிறுவனத்தையே பிரதீப் ரங்கநாதன் மதிக்காமல் புறக்கணிப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்