- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் கணவர் நடித்த படங்களில் எனக்கு 2 படங்கள் தான் ரொம்பவும் பிடிக்கும் - பிரேமலதா...

என் கணவர் நடித்த படங்களில் எனக்கு 2 படங்கள் தான் ரொம்பவும் பிடிக்கும் – பிரேமலதா விஜயகாந்த் சொன்ன சீக்ரெட் – கேப்டன் மகனுக்கு பிடித்தது இந்த படம் தானாம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு நட்சத்திர நடிகராக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். 150க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார். குறிப்பாக 1980 90களில் வெளியான அவரது படங்கள் பெரிய அளவில் பிளாக்பஸ்டர் படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. அவரது படங்களுக்கு பெண்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் நடிகர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவர்களது இளைய மகன் நடிகர் சண்முக பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களிடம் கேப்டன் நடித்த படங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

- Advertisement -

அப்போது பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, நான் திருமணத்துக்கு முன்பே அவரது ரசிகையாக இருந்தேன். அப்போதுதான் டெக் என்று கேசட் போட்டு பார்க்கும் வசதி வந்தது. அப்போது காலேஜில் இருந்து வீட்டுக்கு வந்த பிறகு மதிய நேரத்தில் தூங்கும் பழக்கம் எனக்கு இல்லை.

அப்போது கேப்டன் நடித்த நல்லவன் என்ற படத்தை வீட்டில் டெக்கில் போட்டு ஒரு 50 தடவைக்கு மேல் நான் பார்த்திருக்கிறேன். அதே மாதிரி எனக்கு அவர் நடித்து ரொம்ப பிடித்த படம் உழவன் மகன். அப்புறம் திருமணத்துக்கு பிறகு எவ்வளவோ அவரது படங்கள் வந்தது. எல்லாமே சூப்பர் ஹிட் படங்கள்தான்.

- Advertisement -

என் கணவர் நடித்த படங்கள் எல்லாமே பிடிக்கும். ஆனால் நான் அவரை திருமணம் செய்வதற்கு முன்னாடி என்னை ஆக்கிரமித்த அவரது படங்கள் என்றால் அது நல்லவன் படம். அது ரொம்ப தடவை பார்த்து ரசிச்சிருக்கேன். அதே மாதிரி உழவன் மகன் படமும் எனக்கு பிடித்த படம். நான் அதிக முறை பார்த்து ரசித்த படம் நல்லவன் என்றார்.

இதற்கு பதிலளித்த நடிகர் சண்முகபாண்டியன் கூறுகையில், அப்பா நடித்த படங்களில் எனக்கு ரொம்ப பிடித்த படம் என்றால் அது சத்ரியன். அந்த படத்தில் பிஜிஎம் அந்த மேன்லியான ஆக்டிங் அவரோட அந்த திமிர் அந்த படத்தில் ரொம்பவும் நான் ரசித்தேன் என்று அந்த நேர்காணலில் சண்முக பாண்டியன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்