- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ பட வெற்றி விழாவின் நிகழ்ச்சி நிரல் என்னவென்று தெரியுமா - விஜய் குட்டிக் கதை...

லியோ பட வெற்றி விழாவின் நிகழ்ச்சி நிரல் என்னவென்று தெரியுமா – விஜய் குட்டிக் கதை சொல்வாரா – ரசிகர்களுக்கு காத்திருக்கிறது நிறைய சஸ்பென்ஸ்

- Advertisement -

எப்படியோ முட்டி மோதி, லியோ பட வெற்றி விழாவுக்கு படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் அனுமதி வாங்கி விட்டார். இசை வெளியீட்டு விழாவை போல், இதுவும் சொதப்பி விடுமோ என, லியோ படக்குழுவினர் அச்சமடைந்த நிலையில், போலீஸ் அனுமதி வழங்கியது, நிம்மதியை தந்திருக்கிறது.

லியோ வெற்றி விழாவில், படக்குழுவினர் அனைவருக்கும் தங்க நாணயம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏனெனில், ஜெயிலர் பட வெற்றி விழாவில், அந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் 2 கிராம், 4 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்ட நிலையில், லியோ படக்குழுவுக்கும் அதே போல வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

லியோ படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் படத்தின் இயக்குநருக்கு கார் பரிசு ஏதேனும் வழங்கப்படுமா என்ற ஒரு எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் வழங்கும் ஐடியாவில் லலித்குமார் அல்லது விஜய் இல்லை என்றே சொல்லப்படுகிறது. டைரக்டர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே, விக்ரம் படத்தை சிறப்பாக இயக்கியதற்காக நடிகர் கமல்ஹாசன் அவருக்கு கார் பரிசு வழங்கியிருந்தார்.

இவ்விழா குறித்து வெளியான மற்றொரு முக்கிய தகவல், லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு என்னென்ன ஏற்பாடுகள், நிகழ்ச்சி நிரல் இருந்ததோ அதை பின்பற்றும் வகையில்தான் இவ்விழா நடககும். படம் ரிலீஸ்க்கு முன் என்பதை, படம் ரிலீஸ்க்கு பின்பு என்பதாக மாற்றி, சில மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளனர். மற்றபடி வெற்றிவிழாவுக்கான சிறப்பான ஏற்பாடுகள் ஏதுமில்லை என்றும் தகவல் நிலவுகிறது.

- Advertisement -

விஜயை பொருத்த வரை, லியோ அவருக்கான, அவரது நடிப்புக்கான, அவரது அடுத்த நிலைக்கான ஒரு படமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. கதை சொதப்பல்தான் என்றாலும், ஒரு நடிகராக விஜய் அதில் பாஸ் செய்துவிட்டார். அதனால், எந்த மாதிரியான கேரக்டரிலும் விஜயை நடித்து வைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையை மற்ற இயக்குநர்களுக்கு லியோ தந்திருக்கிறது.

ஆனால், கடந்த முறை போல விஜய் மக்கள் இயக்கத்தினர் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், லியோ வெற்றி விழாவுக்கு வரவழைக்க வாய்ப்பில்லை. காரணம், குறுகிய காலத்தில் விழா நடத்த அனுமதி கிடைத்திருக்கிறது. ஏதேனும் பிரச்னை, விவகாரம் என்றால் விஜய் 68 படத்துக்கு இதே போல் விழா நடத்த அனுமதி வாங்குவதில் சிக்கல் நேரிட வாய்ப்புள்ளது. அதனால், எவ்வித குளறுபடியும் இல்லாமல் விழாவை நல்ல முறையில் முடித்துவிட விஜய், தயாரிப்பாளர் லலித்குமார் திட்டமிட்டுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்