- Advertisement -
Homeபொழுதுபோக்குவெங்கட்பிரபு இயக்கும் சிவகார்த்திகேயன் படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா? - அந்த படத்தை அந்த நிறுவனம்...

வெங்கட்பிரபு இயக்கும் சிவகார்த்திகேயன் படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா? – அந்த படத்தை அந்த நிறுவனம் தயாரிக்குமா? – குழப்பத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த 2024ம் ஆண்டில் வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் மொத்தம் ரூ. 445 கோடி வரை உலகளவில் வசூலித்தது. கடந்தாண்டில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூலை பெற்று முதலிடம் பிடித்ததும் விஜய் நடித்த இந்த படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா மகன் என 2 கேரக்டர்களில் நடித்திருந்தார். சினேகா மீனாட்சி சௌத்ரி கனிகா லைலா பிரசாந்த் பிரபுதேவா ஜெயராம் மைக் மோகன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இருந்தது. மட்ட பாடலுக்கு நடிகை திரிஷாவும் விஜயுடன் இணைந்து ஒரு குத்தாட்டம் போட்டிருந்தார்.

தி கோட் படம் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில் ஏற்கனவே வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிப்பதாக கமிட் ஆகியிருந்த நடிகர் சிவகார்த்திகேயன் சற்று பின்வாங்கினார். மதராஸி பராசக்தி உள்ளிட்ட சில படங்களை முடித்துவிட்டு 2026ம் ஆண்டு இறுதியில் கால்ஷீட் தருகிறேன் என்றும் வெங்கட்பிரபுவிடம் கூறியிருந்தார். எனினும் விடாமுயற்சியே விஸ்வரூப வெற்றி என்ற பார்மூலாவின் படி தொடர்ந்து போராடி சிவகார்த்திகேயனிடம் ஓகே வாங்கி விட்டார் இயக்குனர் வெங்கட்பிரபு.

சமீபத்தில் இலங்கைக்கு தனது உதவியாளர்களுடன் சென்ற இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் முழு ஸ்கிரிப்ட்டையும் ரெடி செய்துவிட்டார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. படத்துக்கு குறிப்பிட்ட பட்ஜெட்தான் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஏனெனில் இந்த நிறுவனம் பட்ஜெட் விஷயத்தில் மிகவும் கறாராக அதே நேரத்தில் சரியாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வெங்கட்பிரபு எழுதிய கதையின்படி இந்த படத்தின் பட்ஜெட்டின் 2 மடங்காக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் மெகா பட்ஜெட்டில் எடுக்க வேண்டிய ஒரு கதையை தான் இயக்குனர் வெங்கட்பிரபு ஸ்கிரிப்ட் ஆக எழுதியிருக்கிறார். அதனால் இந்த படத்தை தயாரிக்க சத்யஜோதி பிலிம்ஸ் முன்வருமா என்பதே பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

ஏனெனில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க எந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் யோசிக்கவே செய்யும். இன்னும் வெங்கட்பிரபு சிவகார்த்திகேயனுக்காக உருவாக்கிய ஸ்கிரிப்ட்டை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திடம் காட்டவில்லை. அவர்கள் பார்த்தால், நிச்சயம் இந்த பெரிய பட்ஜெட்டுக்கு ஒத்துக்கொள்வார்களா, அல்லது இந்த படம் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கு கைமாறுமா, என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

சற்று முன்