- Advertisement -
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் ஆர் சுந்தர்ராஜன் பேசியதாவது, நானும் பாக்யராஜூம் ஒரே ஸ்கூல்ல 3ம் வகுப்பு ஒண்ணா தான் படிச்சோம். ரெண்டு பேருமே லாஸ்ட் பெஞ்ச் தான். அப்போ கணக்கு வாத்தியார் போர்டுல 8 போட்டு அதுக்கு கீழ 4 போட்டு அதுக்கு கீழே ஒரு கோடு போட்டார். அப்புறம் என்னை கூப்பிட்டு 8ல் 4 போனால் எவ்வளவுன்னு என்கிட்ட போர்டில் எழுத சொன்னார். சாக்பீஸை கையில் வாங்கிட்டு எட்டுல எட்டுல எட்டுல நான் சொல்லி மனசுக்குள்ள எண்ணிட்டு இருந்தேன். அப்போ பின்னால இருந்த பாக்யராஜ், சார் அவனை கொஞ்சம் தூக்கி விடுங்க. அவன் எட்டலே எட்டலேன்னு சொல்றான் என்று கிண்டல் பண்ணிட்டான் என்று ஆர் சுந்தர்ராஜன் ஜாலியாக கூறியிருக்கிறார்.





