- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படம் நடிக்கலையேன்னு ரொம்ப பீல் பண்ணினேன், டிவியில் அந்த படம் வந்தா மாத்திடுவேன், இப்போ...

அந்த படம் நடிக்கலையேன்னு ரொம்ப பீல் பண்ணினேன், டிவியில் அந்த படம் வந்தா மாத்திடுவேன், இப்போ அந்த படம் நடிக்கலைன்னு சந்தோஷப்படறேன் – என்னப்பா இது, லாரன்ஸ் மாஸ்டர் இப்படி போட்டு குழப்பறாரு

- Advertisement -

நடிகர் ராகவா லாரன்ஸ், மாஸ்டர் என்றுதான் இன்னும் அழைக்கப்படுகிறார். ஏனெனில் டான்ஸ் மாஸ்டராக அவர், தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். பல நடிகர், நடிகைகளை ஆட்டுவித்தவர். ஆட வைத்தவர். ஹீரோவாக மாறிய பின்பும் அவர் இன்னும் மாஸ்டராக, பலருக்கும் இருக்கிறார். அவரது படங்களுக்கு மட்டுமல்ல, மற்ற ஹீரோக்களுக்கும் டான்ஸ் மாஸ்டராக பணி செய்கிறார்.

அஜீத்குமார் நடிப்பில், இயக்குநர் சரண் இயக்கிய அமர்க்களம் படத்தில், காலம் கலிகாலம் ஆகிப் போச்சுடா, பாடல் காட்சி மூலம் அறிமுகமானவர்தான் ராகவா லாரன்ஸ். பிறகு, பிரசாந்த் – லைலா நடித்த பார்த்தேன், ரசித்தேன் படத்தில் அடாவடி வாலிபராக நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். முனி படம், அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல அடையாளத்தை தந்தது. தொடர்ந்து காஞ்சனா அவரை முன்னணி ஹீரோவாக மாற்றியது.

ராகவா லாரன்ஸ் நல்ல நடனக்கலைஞர், நடிகர் என்பதை விட அவர் மனிதநேயம் மிக்க சிறந்த மனிதர் என்பதாலேயே பலருக்கும் பார்த்தவுடன் மிகவும் பிடித்த மனிதராகி விடுகிறார். ஏனெனில், வாழ்க்கையில் நலிந்த நிலையில் இருப்பவர்களுக்கு கோடிக்கணக்கில் உதவும் ஒரே சினிமா கலைஞர் அவர்தான். அவரது வருமானத்தில் பெரும்பகுதியை மாற்றுத் திறனாளிகளுக்கும், நலிவடைந்த மக்களுக்கும் செலவு செய்கிறார். அதற்காக, அவர் பிறரிடம் நன்கொடை பெற விரும்பாமல் சொந்த வருமானத்தில் செய்யவே விரும்புவதுதான் இதில் ஹைலைட்டான விஷயம்.

இந்நிலையில் , ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்தது குறித்து, சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது, ஜிகர்தண்டா 1 நான்தான் பண்ண வேண்டியது. பாபி சிம்ஹா நடிச்ச அந்த சேது கேரக்டர். கார்த்திக் சுப்புராஜ், கதிரேசன் ரெண்டு பேரும் வந்து என்கிட்ட கதை சொன்னாங்க. அந்த சூழலில் நான் தெலுங்கு படம் பண்ணிட்டு இருந்ததால, இதுல பண்ண முடியாம போச்சு. அப்புறம் தியேட்டருல இந்த படத்தை போய் நான் பார்க்கறேன். படம் பார்த்துட்டு வெளியே வந்த நான், வீட்ல ஒரு நாள் முழுக்க அப்படியே அப்செட்டாவே இருந்தேன். அய்யய்யோ நல்ல ஒரு படத்தை இப்படி மிஸ் பண்ணிட்டோமேங்கற ஒரு பீலிங்கிலேயே இருந்தேன்.

அதுமட்டும் இல்லாம, கேக்கும்போது ஒரு மாதிரி இருந்தது ஸ்கிரிப்டு. அதை எடுக்கும்போது எப்படி இவ்வளவு பிரமாண்டமா, இருக்கே. சொல்றது அஞ்சு பர்சென்டா இருக்கு, எடுக்கறது நூறு பர்சென்டா இருக்கேன்னு அய்யய்யோ தப்பு பண்ணிட்டோமே, அப்படீன்னு ரொம்ப பீல் பண்ணினேன். அப்புறம் எப்ப அந்த படம் டிவியில போட்டாலும், நான் பார்த்தா உடனே டக்குன்னு மாத்திடுவேன். ஏன்னா, அந்த படத்துல நடிக்கலேங்கற பீல் ஆவுமேன்னு தான்.

என்ன இது, தப்பு பண்ணி்ட்டோம், தப்பு பண்ணிட்டோமுன்னு அப்போ ரொம்ப பீல் பண்ணினேன்.ஜிகர்தண்டா 2 நம்மை தேடி வரும்போது, நல்ல வேளை, அந்த படத்தை மிஸ் பண்ணினது நல்லதுதான்னு தோணுச்சு. ஏன்னா, அந்த படத்துல நடிச்சிருந்தா, இந்த படத்துல நடிக்கிற சான்ஸ் கிடைச்சிருக்காது, என்று கூறியது இப்போது வைரலாகி வருகிறது.

சற்று முன்