தமிழ் சினிமாவில் பேய் திரைப்படங்களுக்கு எப்போதுமே ஒரு வரவேற்பு இருக்கும். கடந்த காலங்களில், ஹாரர் திரைப்படங்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வந்தது. இடையில் அதற்கான தேர்வு விட்டுப் போக ஹாரர் திரைப்படங்களை தமிழ் சினிமா மறந்தது என்றே கூறலாம்.
இதனை மீண்டும் ரசிகர்களிடம் கொண்டு வந்து சேர்த்தவர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் சுந்தர் சி தான். குறிப்பாக முனி திரைப்படத்தின் மூலம் ராகவா லாரன்ஸ் மீண்டும் ஹாரர் திரைப்படங்களை தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக நகர செய்தார். இதில் மற்றொரு முக்கியமான விஷயம், பேய் திரைப்படங்களில் ராகவா லாரன்ஸ் புகுத்திய நகைச்சுவை காட்சிகள் தான்.
ஹாரர் திரைப்படங்கள் என்றால் மக்கள் பயந்து கொண்டே தான் இருக்க வேண்டும் என்ற தியரியை மாற்றி, அதில் பாதிக்கு பாதி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க முயற்சி செய்த ராகவா லாரன்ஸ் அதில் வெற்றியும் கண்டார். குறிப்பாக காஞ்சனா படத்தின் முதல் பாகத்தை கூறலாம்.
சரத்குமார் கோவை சரளா தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருந்த காஞ்சனா திரைப்படத்தின் முதல் பாகத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். குறிப்பாக கோவை சரளா வரும் காட்சிகள் எல்லாம் திரையரங்குகளில் சரவெடி வெடிக்க, காஞ்சனா படத்தின் முதல் பாகம் கோடிக்கணக்கில் வசூல் செய்தது. இந்த ரூட் சரியாக அமைந்ததால் அதன் அடுத்த அடுத்த பாகங்களை எடுக்க முடிவு செய்தார் ராகவா லாரன்ஸ்.
இந்த பக்கம் சுந்தர் சி யும் அரண்மனை திரைப்படத்தின் மூலம் ராகவா லாரன்ஸின் வழியை பின்பற்றி படங்களை இயக்க ஆரம்பித்தார். இவர்கள் நினைத்தது போலவே அடுத்தடுத்த பாகங்களும் வெற்றி பெற்றன. காஞ்சனா படத்தின் முதல் இரண்டு பாகங்களும் அரண்மனை படத்தின் முதல் இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் மூன்றாம் பாகங்கள் தோல்வியடைந்தன.
இந்த நிலையில் அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தை எடுத்து சுந்தர் சி சமீபத்தில் வெளியிட்டார். யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக குடும்ப ஆடியன்ஸ்கள் வரவேற்பு கொடுத்ததால் 100 கோடி ரூபாய் வசூல் குவித்தது. இப்படியான சொல்லில் காஞ்சனா படத்தின் நான்காம் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் ராகவா லாரன்ஸ். ஏற்கனவே அது பற்றி அவர் கூறியிருந்தார். இதழில் செப்டம்பர் மாதம் இதற்கான படப்பிடிப்பை தொடங்க லாரன்ஸ் திட்டமிட்டு இருக்கிறார்.





